Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Gandhiji

மத்திய அரசை திணற வைத்த சிறுமி

காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ? தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம், அவர் கேட்ட கேள்வி ஒன் றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகா த்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார்? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட் டது என்று கேட்டாள் அந்த (more…)

செவ்வாய்க் கிரகத்தில் மகாத்மா காந்தி: வானியல் விஞ்ஞானி – வீடியோ

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் இருக்கின்றார்களோ இல் லையோ மகாத்மா காந்தி இருக்கின்றார். இத்தாலி நாட்டு வானியல் விஞ்ஞா னிகளில் ஒருவரான மாட் யூலேனி அங்குள்ள காந் திஜியை அடையாளம் கண் டுள்ளார். அதே மொட்டை தலை, பெரிய காதுகள், அடர்ந்த மீசை, பொக்கை வாய்ச் சிரிப்பு ஆகியவற்றை கண்டு கொண் டார் என்று அடித்துக் கூறி உள்ளார். ஆம். செவ்வாயில் உள்ள மேடு ஒன் று மகாத்மா காந்தியின் (more…)

காந்தியின் பொன்மொழிகள்

உலகைத் தாங்குவது அன்பு அணுக்களிடையே இணைக்கும் சக்தி இருப்பதால்தான், உலகம் பொடிப்பொடியாக உதிர்ந்துவிடாமல் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அது போலவே, உயிர்களிடத்தும் அன்பு என்னும் இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். அன்பு உள்ள இடத்திலேயே, உயிர் இருக்கிறது. பகைமை அழிவையே தருகிறது. மனித ஜாதி அழியாமல் ஜீவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், இணைக்கும் சக்தியே. இது பிரிக்கும் சக்தியை விடப் பெரியது. உண்மை இன்றேல் அன்பும் இல்லை. உண்மை இல்லாமல் பாசம் இருக்கலாம். உதாரணம், பிறர் கெடத் தான் வாழும் தேசபக்தி. உண்மை இல்லாமல் மோகம் இருக்கலாம். எடுத்துக்காட்டு, ஓர் இளம் பெண்ணிடம் ஒரு வாலிபன் கொள்ளும் காதல். உண்மை இல்லாமல் வாஞ்சை இருக்கலாம். உதாரணமாக, பெற்றோர் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு மிருகத்தன்மைக்கு அப்பாற்பட்டது. அது ஒரு போதும் பாரபட்சமாய் இருக்காது. உலகத்தை தாங்கி நிற்பது அன்பு ஒன்றே என்பது என் திடம

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பெரியார்

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் (1919-1925) பெரியார் 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்து பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவிகளான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியை துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டதுமட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமை அடியொடு ஒழித்தார். 1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக பெரியார் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கை
This is default text for notification bar
This is default text for notification bar