
யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு
யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு
நடிகையர் திலகம் சாவித்திரி, நாட்டியப் பேரொளி பத்மினி, குமாரி கலா, தேவதை தேவிகா உட்பட பல நடிகைகளின் நடிப்பை பார்த்து ரசித்திருப் போம். ஒரு வசனம் என்றாலோ ஒரு பாடல் என்றாலோ உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையில் இருக்கும் பொருளை உணர்ந்து அந்தந்த வார்த்தைகளுக்கேற்ப முக அசைவில் கண்களில், வாயசைவில், புருவத்தில், கன்னத்தில் போன்றவற்றில் பாவத்தை உட்புகுத்தி நவரசத்தையும் பொழிந்திருப்பர். அவர்களின் வீடியோக்களை இன்றுகூட பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அவர்களின் நடிப்பினை ரசிப்பது அவர்களின் நடிப்புத் திறனுக்கு மிகச்சிறந்த சான்றாகும். உதாரணமாக சில நடிகைகளை இங்கு குறிப்பிடலாம். பராசக்தி திரைப்படத்தில் ஓ ரசிக்கும் சீமானே என்ற பாடலில் குமாரி கலா அவர்களும், பஞ்சவர்ணகிளி திரைப்படத்தில் தமிழுக்கு அமுதென்று பேர் என்ற பாடலில் கே.ஆர். விஜயா அவர்களும், நவராத