
பாவாடை தாவணியின் நவீன வடிவங்களும் – இன்றைய பெண்களும்
பாவாடை தாவணியின் நவீன வடிவங்களும் - இன்றைய பெண்களும்
பெண்களுக்கு இந்திய உடைகள் ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் அந்த உடைகளில் குறிப்பாக தென்னிந்திய உடைகளில் மிகவும் ரசித்து அணிந்து கொள்ளும் ஆடை என்று பாவாடைத் தாவணியைக் கூறலாம். பாவாடை தாவணிக்கு என்று தனித்துவமும் பெண்களிடையே வரவேற்பும் எப்போது இருந்து கொண்டே இருக்கிறது.
நம்முடைய அம்மா காலத்தில் எல்லாம் பூப்படைந்த பிறகு திருமணமாகும் வரை பெண்கள் அணிந்த ஆடை என்றால் அது பாவாடைத் தாவணிதான். காலங்கள் மாற மாற பாவாடைத் தாவணி என்பது கல்யாணம், வரவேற்பு, கோவில் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்ளும் ஆடையாக மாறியது. இப்பொழுது சிறு குழந்தைகளுக்குக் கூட பாவாடைத் தாவணி அணிவித்து நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது.
இளம்பெண்கள் இந்த பாவாடைத் தாவணியில் அழகுதான். அதிலும் பட்டுப் பாவாடைத் தாவணியில் என்றால் கேட்கவா வேண்டும்.