
8 வழிச்சாலை – தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு
8 வழிச்சாலை - தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி - அதிர்ச்சியில் தமிழக அரசு
8 (எட்டு) வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து சரமாரியாக கேள்விகளையும் கேட்டு தமிழக அரசையும் முதல்வர் எடப்பாடியாரையும் அதிர்ச்ச்க்கு உள்ளாக்கியுள்ளது.
சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை-சேலம் இடையே 8 (எட்டு) வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன