Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Hosting

தேன் சேகரிப்பு முறை – வீடியோவில்

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட, சாகா வரம் பெற்றது எது தெரியுமா?  தேன் தான் தேனை பார்த்திருப்பீர்கள், தேனை ருசித்திருப்பீர்கள் ஆனால் அது எப்படி எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதோ உங்களுக்காக‌ தேன் சேகரிப்பு முறை - வீடியோவில்

ஈசனின் சொரூபங்கள்!

பகவத் தியானத்தில் ஈடுபட்டவர்கள், கண்ணை மூடி மவுனமாக தியானம் செய்வர். கண்ணை திறந்து கொண்டிருந்தால், பல விஷயங்களை பார்க்க தூண்டும்; அதனால், தியானம் கலையும். அதேபோல வாய், மூக்கு, அங்கங்கள் மூலமாகவும் தியானத்துக்கு பங்கம் ஏற்படலாம்.  தியானத்துக்கு தனிமை முக்கியம். இப் படி புலன்களை அடக்கி, தியானம், தவம் செய்பவர்களை ஞானிகள் என்று அழைப்பர். அஞ்ஞானத்தில் உழல்பவர்களுக்கு இடையே செல்வ செழிப்பு, ஏழ்மை, வறுமை, மேலான பிறவி, இழிந்த பிறவி போன்ற வேற்றுமைகள் இருக்கும்.  தியானத்தில் ஈடுபட்டு, சமாதி நிலையில் உள்ளவர்கள், இது போன்ற மாயாபேதங்களை உணர மாட்டார்கள். இந்த நிலையில் குறைபாடு ஏற்பட்டால், அதற்கு காரணம் மனம் தான். இந்த சக்தி, சிவசக்தியால் நடைபெறுகிறது. எட்டு போன்ற சொல் அஷ்டமூர்த்தியை குறிக்கும். நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இந்த எட்டு ஜட வஸ்துகளும் ஈசனுடைய சொ

விக்கிலீக்ஸ் இணையதளம் பகிரங்க மிரட்டல்

விக்கிலீக்ஸ் இணையதளம், தனது இணையதளத்தில்  ஈராக்  மற்றும் ஆப்கன் போர்களில் அமெரிக்க ராணுவம் பல்வேறு தகவல்களை மூடி மறைத்து விட்டது.  விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் அந்த உண்மைத் தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ரஷ்யா, துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் முன்பைவிட தற்போது அதிக பைல்களை வைத்திருப்பதாகவும் அவற்றை வெளியிடப்போவதாகவும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

தில்லுமுல்லு திரைப்டத்தில் இடம்பெற்ற ராகங்கள் 16 . . எனத்தொடங்கும் பாடல் காட்சி

எஸ்.பி.பி. அவர்களின் தேனினும் இனிய குரலாலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் அசத்தலான நடிப்பாலும், கவிஞரின்  அற்புதமான பாடல் வரிகளாலும் இசையமைப்பாளரின் இசையாலும் மெருகேற்றப்பட்ட‌ தில்லுமுல்லு திரைப்டத்தில் இடம்பெற்ற ராகங்கள் 16 . .  எனத்தொடங்கும் பாடல் காட்சி கண்டுகளியுங்கள்

தேனீயைப் பாருங்கள் – பட்டினத்தார்

மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள். ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும் போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை. ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும் போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள். தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும