Saturday, February 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Humor

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல் உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல் ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் (more…)

கண்ணைக் கவரும் திருமண நகைகள்!

திருமணம் என்றாலே இந்தியக் குடும்பங்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். இதைவிடப் பெரிதாக ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு நகையும், உவகையும் பொங்கும் நிகழ் வாக திருமணங்கள் கருதப் படுகின்றன.   உலகத் தங்கக் கவுன்சில் திருமணம் என்றாலே இந்தியக் குடும்பங்களுக் கு ஒரு கொண்டாட்டம் தான். இதைவிடப் பெரிதா க ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு நகையும், உவகையும் பொங்கும் நிகழ்வாக (more…)

மாற வேண்டும் . . . மாற்ற‍ வேண்டும் . . .

நவம்பர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  தமிழக மக்க‍ள் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பிரச்சனை களை இந்த ஆட்சியில் சந்தித்து வருகிறார்கள். எலியும் பூனையும் குடித்தனம் நடத் தும் மருத்துவமனைகள் . . . மருந்துக் கும் கட்ட‍ப்படாத டெங்கு போன்ற புது நோய்கள் ... பராமரிப்பின்றி பரிதாபமாய் காட்சித்தரும் சாலைக ள், வழக்க‍மான காவிரி நீர்ப்பிரச்ச னை ... வழக்க‍த்திற்கு மாறான கூட ங்குளம் போன்ற போராட்ட‍ங்கள். . . இவையெல்லவற்றிற்கும் சிகர மாய் (more…)

அந்நியர் வந்து புகல் என்ன‍ நீதி?

அக்டோபர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  வெள்ளையனிடம் வாங்கிய சுதந்திரத்தை ஆட்சிக்கொள்ளையரிடம் கொடுத்துவிட்டோம் என்ற கவி தை வரிகளை உண்மையாக்கிக் கொ ண்டிருக்கிறார்கள் இந்த தேசத்து அரசியல்வாதிகள், வாழ்க அவர்கள் தொண்டு! வியாபாரம்செய்ய‍ வந்தவர்களை விரட்டியடித்து, வீர சுதந்திரம் கண்ட இதே தேசத்தில் இன்று புதிய பொ ருளாதாரக் கொள்கை என்கிற பெய ரில் அதே வியாபாரி களுக்கு இரத் தினக் கம்பள (more…)

நாயுடன் திருமணம் செய்த 30 வயது வாலிபர் . . .

                நாயுடன் திருமணம்  செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஜோசப் கைஸோ. இவர் லாப்ரடார் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்தார். எந்த சூழ்நிலையிலும் அவர் நாயைவிட்டு பிரியாமல் இருந்தார். இந்நிலையில் அவருக்கு வினோத ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனக்கு பிரியமான நாயையே திருமணம் செய்து கொள்வது என்று .அதற்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினார். திருமணவிழா ஆஸ்திரேலியாவின் லாரல் பேங்க் பார்க் என்ற இடத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடைபெற்றது. விழாவிற்கு நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வந்திருந்து வாழ்த்திச் சென்றனர். செய்தி - தினமலர், / படத்தொகுப்பு விதை2விருட்சம்

விஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சினிமா வட்டாரத்தைக் கலக்கி வரும் நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்னை நாளுக்கு நாள் வலுத்து கொண்டே போகிறது. இந்நிலையில் விஜயகுமார் குறித்த ரகசியங்களை புத்தமாக வெளியிடுவேன் என்று நடிகை வனிதா கூறியுள்ளார். நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார் (30). இவருக்கும், நடிகர் விஜயகுமாருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக இருவரும் மதுரவாயல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார், விஜயகுமார் அளித்த புகாரின் மீது வழக்கு பதிந்து, வனிதா விஜயகுமாரின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜனை கைது செய்தனர். இதை எதிர்த்து, டி.ஜி.பி.,யிடம் வனிதா புகார் அளித்தார். வனிதா கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிந்து, விஜயகுமார், மஞ்சுளா மற்றும் விஜயகுமாரின் முதல் மனைவியின் மகனும், நடிகருமான அருண் விஜய் ஆகியோரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விஜயகுமார், மஞ்சுளா

+2 பொதுத் தேர்வுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி துவங்குகிறன. பள்ளிகளில் தற்போது, அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதையடுத்து பொதுத் தேர்வு பணிகளை அரசு தேர்வுத் துறை துவங்கியுள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பான தற்காலிக தேர்வு அட்டவணை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 1ம் தேதி முதல் தேர்வை துவக்கலாமா அல்லது மார்ச் 2ம் தேதி துவக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. மார்ச் 1ம் தேதி செவ்வாய்க் கிழமையாக உள்ளதால், மார்ச் 2ம் தேதி தேர்வுகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் நேற்று இரவு தெரிவித்தன.தொடர்ந்து, மார்ச் 20ம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. தற்காலிக தேர்வு அட்டவணைகள், ஓரிரு நாளில் மாவட்டங்களில் உள்ள கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்டு, அத

உங்கள் கைபேசி (செல்போன்)-ல் வரும் தேவையற்ற அழைப்புகளை தடுக்க . . .

கைபேசி அதாவது செல்போன் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நமது இரண்டு கைகளோடு மூன்றாவது கையாக செல்போன் மாறிவிட்டது. இதனால் நன்மைகள் பல இருந்தாலும் சில தொல்லைகளும் உண்டு செல்போன் வாடிக்கையாளர்களான‌ நம்மில் பலரையும் ஏன் எல்லோரையும் புலம்ப வைக்கும் ஒரே ஒரு  விஷயம் என்னவென்றால், டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் தான். பயனாளர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார். எந்த நிலையில் இருக்கிறார் என்றெல்லாம் பார்க்காமல் நேரம், காலம் இன்றிவரும் இந்த தேவையற்ற அழைப்புகளால் மிகுந்த எரிச்சலுக்கு ஆளாகும் வாடிக்கையாளர்களுக்கு ஓரு நல்ல செய்தி, இதுபோன்ற அழைப்புக்களை தடுத்து நமக்கு நிம்மதியை தரும்  திட்டம்தான். எதிர் வரும் 2011 ஜனவரி மாதம் முதல் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் அனைத்தும் 700 என்ற துவக்க எண்கள் கொண்ட எண்களில் இருந்தே அமையும். இதனால் வாடிக்கையாளர்கள் அந்த அழைப்புகளை ஏற்பதா? அல்லது புறக்கப்பதா?  என்

பெண்களை விலைக்கு வாங்கும் கொடூரம்

பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கும் கொடுமை ஹரியானாவில் நடக்கிறது. இந்தியாவிலேயே பஞ்சாபிற்கு அடுத்தபடியாக ஹிரியானாவில்தான் பெண்கள் மிக குறைவாக இருப்பதால் அருகில் உள்ள பீகார், மேற்குவங்காளம், ஆந்திரா, குஜராத், போன்ற மாநிலங்களில் இருந்து பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இதன் விலை குறைந்தபட்சம் 1000 முதல் ரூ.100,000- வரை விலை நிர்ணயிக்கப்பட்டு வாங்குதல் நடைபெறுகிறது.  இப்படி விலைக்கு வாங்கப்படும் பெண் குழந்தைகள்  இடம் பெயர்வதால் மொழி பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் அவதிக்கு உள்ளாவதாக ஒரு  தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்து . . .

திருச்சியில் தொடர் மழை பெய்து வருவதால், திருச்சி அண்ணா பல்கலைகழகத்திற்க்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துணை வேந்தர் தேவதாஸ் மனோகரன் அறிவித்துள்ளார். இதற்கிடையில் திருச்சியில் தொடர் மழை பெய்து வருவதால், வானம் கடும் மேக மூட்டத்துடன் இருள்சூழ்ந்து காணப்படுவதால் விமானங்கள் இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு விமான சேவையும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை: கொரியாவுக்குள் நுழைந்தால் நடப்பதே வேறு

தென்கொரியா, தனது மக்களை போர்க் கேடயமாக பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ள வடகொரியா, "அமெரிக்காவின் "ஜார்ஜ் வாஷிங்டன்,' கொரியாவின் மஞ்சள் கடல் எல்லைக்குள் வந்தால் அதன்பின் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது' என்று, புதிய மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து விடுத்துவரும் எச்சரிக்கைகளால் தென்கொரிய மக்களிடையே மேலும் மேலும் கோபம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், தென்கொரியாவுக்கு சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் தென்கொரிய கடற்படைவீரர்கள் இருவர், 60 வயதுள்ள இரண்டு பேர் என நான்கு பேர் பலியாயினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று தென்கொரியத் தலைநகர் சியோல் அருகில் உள்ள சியோன்க்னம் நகரின் ராணுவ மருத்துவமனையில், பலியான இரு கடற்படை வீரர்களுக்கான இறுதியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்கொரிய பிரதமர் கிம் ஹ்வாங் சிக் உ

பாராளுமன்ற இரு அவைகளும் நடக்காததால், தினப்படி வழங்க வேண்டாம் என்று : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 78 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, "பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர். "ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கின. இந்நிலையில், நேற்று லோக்சபா துவங்கியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் வரும் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதில் தன்னால் முடிவு காண முடியவில்லை என்று பிரணாப் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த முட்டுக்கட்டை நிலைக்கு அரசு காரணம் எ