நமது இணையதளத்தில் வாயிலாக இசையைப் பற்றிய ஆவலுடன் காத்திருக்கும் வாசகப் பெருமக்களுக்கு நமது விதை2விருட்சம் இணையதளத்தின் சார்பில் நன்றி,
முதலில் இசை என்பது ராகம், தாளம், பாடல் வரிகள என மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்தவை. ராகம், தாளம் என இவை இரண்டும் மட்டுமே இணைவதால், இனிமையான மெட்டு கிடைக்கிறது. இவை இரண்டு மட்டுமே வைத்து நாம் இசையை ரசிக்க முடியும் ஆனால் அந்த மெட்டுக்கு ஏற்ற மெருகூட்டப்பட்ட பாடல் வரிகளும் இணைந்து விட்டால் . . . அட டா அட டா அந்த பாடல்களின் இனிமையை சொல்ல வார்த்தைகளா இல்லை.
முதலில் ராகங்களைப் பற்றி பார்ப்போம்.
ராகங்கள் உருவாக காரணம் ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற 7 ஸ்வரங்கள்தான்.
அவற்றின் ஒவ்வொரு ஸ்வரங்களுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உண்டு.
ஸ - ஷட்ஜம்
ரி - ரிஷபம்
க - காந்தாரம்
ம - மத்தியமம்
ப - பஞ்சமம்
த - தைவதம்
நி - நிஷாதம்
ஆகும்.
அமுதத்தை