
ரஜினியுடன் இந்துஜா – மறுத்தது ஏன்? வெளி வராத தகவல்
ரஜினியுடன் இந்துஜா - மறுத்தது ஏன்? வெளிவராத தகவல்
நடிகர் விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்துள்ள படம் பிகில். தீபாவளி ரிலீசாக இந்த படம் ரிலீசாக இருக்கிறது. பெண்கள் கால்பந்தை கதைகளமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரத்தில் இந்துஜாவும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்காக இந்துஜா தனது தலைமுடியைக் குறைத்துள்ளார். சமீபத்தில் வெளியான மகாமுனி படம் இந்துஜாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார் என்ற பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. எனவே, பிகில் படத்தில் அவரது கதாபாத்திரத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், பிகில் படத்தில் நடித்து கொண்டிருந்ததால், ரஜினியின் தர்பார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மறுக்க வேண்டிய நிலை இந்துஜாவுக்கு ஏற்பட்டு விட்டதாம். தமிழில் நடிக்கும் அனைவருக்குமே ரஜினி