Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Iowa Hawkeyes

இப்படி யோசித்தால் என்ன?

தினமணியில் வெளிவந்த தலையங்கம் தமிழர் திருநாள் கொண்டாட்டங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு வழக்கம் போல இந்த ஆண்டும் நடைபெற்று முடிந்தது என்றாலும், அது நடத்தப்பட்ட விதமும், இந்த வீர விளையாட்டு வணிக மயமாக் கப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது இந்த விளையாட்டில் அரசு தலை யிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு ள்ளதை உணர முடிகிறது. ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தத் தமிழர் விளையாட்டு பழங்கால முத்திரைச் சின்னமாக இடம்பெற்று இருந்திருக்கிறது. இது குறித்த வரலாற்றுப் பதிவுகளும் இருக்கின்றன. ஏறுதழுவுதல் என்கிற இந்த வீர விளையாட்டு, பொங்கல் திருநாளில் மட்டும்தான் நடத்தப்பட்டதா என்பது குறித்து சந்தேகத்துக்கு இடமின்றிச் சொல்ல முடியாது. இருப்பினும், பொங்கல் நேரத்தில் ஓய்வும், பண்டிகைக் கொண்டாட் டங்களும் நிறைந்த வேளையில் இது வழக்கத்துக்கு வந்திருக்க வேண்டும். பரிசுத் தொகையாக சல

ஆதர்ச’ அமைச்சர்

தினமணியில் வெளிவந்த தலையங்கம் இந்தியாவில்கூட இப்படியெல்லாம் நடக்குமா? ஓர் அமைச்சரால் இப்படிக்கூடச் செயல்பட முடியுமா? வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார் மத்திய வனம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் துறையின் அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ். முறையாக அனுமதி பெறாமல், வரைமுறைகளை மீறி மும்பையில் எழுப்பப்பட்ட 31 மாடி ஆதர்ஷ் குடியிருப்பை இடித்துவிட உத்தரவு பிறப்பிக்கும் தைரியத்துக்காகவே அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைப் பாராட்ட நாம் கடமைப் பட்டிருக்கிறோம். ஆதர்ஷ் கூட்டு றவுக் குடியிருப்பு சங்கம் சார்பில் மும்பையிலுள்ள கொலாபா பகுதியில் எழுப்பப் பட்டிருப்பதுதான் இந்த 31 மாடிக் குடியிருப்பு. கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்காக எழுப்பப் படுகிறது என்கிற போலிச் சாக்கில், பல சட்டதிட்டங்களை, வரைமுறைகளை, பெற வேண்டிய முறையான அனுமதிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, ஒரு சில அரசியல் பெரும் புள்ளிகளின் உறவின

பத்தும் பறந்துபோகும்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம் ஏதோ கனவுலகத்திலிருந்து திடீரென்று விழித்துக் கொண்டது போல எல்லோரும் விலை வாசியைப் பற்றிப் பேசத் தொடங்கி இருக்கி றார்கள். அவசர அவசரமாகப் பிரதமர் தலைமையில் மத்திய அமைச் சரவை கூடி வெங்காய விலையைக் குறைப்பது பற்றியும், தக்காளி உற்பத்தியைப் பெருக்குவது பற்றியும், ஒட்டுமொத்த விலை வாசி உயர்வைக்கட்டுப்படுத்துவது பற்றியும் விவாதிக்கிறது. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக இத்தனை நாள்கள் கவலைப் படாமல் இருந்து விட்டு, பிரச்னை கைமீறிப் போனபிறகு இவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு தீர்வுகாண முயல்வதைப் பார்க்கவும் கேட்கவும் வேடிக்கையாக இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் சர்க்கரை விலை 1.3 சதவீதம் அதிகரித் திருக்கிறது. இரும்பு உருக்கு (ஸ்டீல்) விலை ஒரு டன்னுக்கு ரூ.1,500-லிருந்து ரூ. 2,000 வரை உயர்ந்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் பெட்ரோல் பொருள்களின் விலை 6 சதவீ

நரியைப் பரியாக்கும் கபில் சிபல்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம் கபில் சிபல் இந்தியாவின் தலைசிறந்த வழக்குரைஞர்களில் ஒருவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர் பாளராகச் சிறப்பாகச் செயல்பட்டுப் பாராட்டுப் பெற்றவர். இவர் மத்திய அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான போது, அறிவுஜீவியும் உலக விவரங்கள் தெரிந்த வரும், ஊழல்களில் ஈடுபட அவசியமில்லாதவருமான ஒருவரைப் பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தது.  இப்போதல்லவா தெரிகிறது, காங்கிரஸ் கட்சி கபில் சிபலை ஏன் அமைச்சரவையில் சேர்த்துக் (more…)

பிடிவாதம் சரியல்ல!

தினமணியில் வெளிவந்த தலையங்கம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அமைக்கப்பட்டபோது "இதுவெறும் கண்துடைப்பு' என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் குறை கூறினர். எப்படியும் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் காலவரையறை நீட்டிக்கப் படும் என்பதுதான் எல்லாருடைய கருத்தாகவும் இருந்தது. வழக்கமாக அதுபோன்றுதான் எல்லா கமிட்டிகளிலும் நடக்கிறது. குறைந்த காலகட்டத்தில் அனைவருடைய கருத்துகளையும் அறிய முடியவில்லை என்பதால் மேலும் சில மாதங்கள் நீட்டிக் கப்பட வேண்டும் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கேட்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அக்குழு விரைவாக தனது பணியை முடித்து, அறிக்கையையும் அளித்துவிட்டது. இதற்காகவும் பாராட்ட வேண்டும்.  ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் ஆறுவிதமான யோசனைகளில் தற்போதுள்ள நிலையே நீடிக்கலாம் என்றும், மாநிலத்தைப் பிரிக்காமல், தெலங்கானா மண்டலக் குழுவை அமைத்து அதற்குப் பல்வேறு அ (more

பாரு பாரு அமெரிக்காவைப் பாரு!

தினமணியில் வெளிவந்த தலையங்கம் அமெரிக்காவில் ஏற்கெனவே உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாலும், அந்த அமைப்பை மேலும் சட்டரீதியில் வலுவுள்ளதாக மாற்றுவதற்கு ஜனவரி 4-ம் தேதி ஒரு சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இந்தச் சட்டத்துக்கு "உணவுப் பாதுகாப்பு நவீனப்படுத்தல் சட்டம்' என்று பெயர்.  இந்தச் சட்டத்தின் மிகப்பெரும் பலமாகக் கருதப்படுவது, சரியில்லாத உணவுப் பொருள் அல்லது மருந்தைத் திரும்பப் பெறுமாறு உத்தரவு போட முடியும். இதுவரையிலும் அப்படியொரு உணவுப் பொருள், மனிதருக்குக் கேடு விளைவிப்பதாக (more…)

சாலை புதிது, வேகம் புதிது!

தினமணியில் வெளிவந்த தலையங்கம் ஆண்டின் தொடக்கத்திலேயே இரண்டு விபத்துகள் படிப்பவர் நெஞ்சை வலிகொள்ளச் செய்வதாக இருந்தன. ஜனவரி 1-ம் தேதி, இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்த வேன், கிருஷ்ணகிரி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது அதிகாலை 2 மணியளவில் மோதியதில், புது மணத் தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். ஜனவரி 2-ம் தேதி தொப்பூர் அருகே, சபரிமலைக்குச் சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்த கார், நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில் 9 பேர் இறந்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் அதிகாலையில் நிகழ்ந்துள்ளன என்பதும், இரண்டுமே நின்று கொண்டிருந்த (more…)

முன்னுதாரண முதல்வர்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம் ஓரு மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமையும் என்றால், அந்த மாநிலத்தில்  ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு வானத்தின் கீழ் உள்ள எல்லா சலுகைகளும் கிடைத்து விடுகின்றன என்பது இன்றைய அரசியல் தலையெழுத்தாக இருக்கும்போது, பிகார் மாநிலத்தில், இந்தியாவே அதிசயப்படும் வகையில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் முதல்வராக நிதீஷ்குமார் பதவியேற்ற போதிலும், அவர் செய்திருக்கும் முதல் பணி எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்திருப்பதுதான். கடந்த ஆட்சியிலும் தானே முதல்வராக இருந்துள்ள நிலையில், எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் ஊழல் நடப்பதால் இதை ரத்து செய்கிறேன் என்று சொன்னால், (more…)

தலையங்கம்: எது நிஜம்?

தினமணியில் வெளிவந்த தலையங்கம் நீதிமன்றங்களின், குறிப்பாகக் கூறவேண்டுமானால் நீதித் துறையுடன் தொடர்புடையவர்களின் கருத்துகள் விவாதப் பொருளாகி வருவது வேதனைக்குரிய ஒன்று. நீதிபதிகளே இப்படியா,  நீதித்துறையே இப்படித்தானா என்று சராசரி இந்தியன் நம்பிக்கை இழந்துவிட்டால் அதன் விளைவுகள் இந்திய சுதந்திரத்தின், மக்களாட்சி அமைப்பின் அடித் தளத்தையே (more…)

தலையங்கம்: உதறலால் வரும் உளறல்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம் ஹமந்த் கர்கரே கொல்லப்பட்டு இரு ஆண்டுகள் முடிவுற்றுள்ளன. இந்நிலையில், இந்து தீவிரவாத அமைப்புகள் மூலமாக என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அஞ்சுகிறேன் என்று தம்மிடம் ஹேமந்த் கர்கரே கூறியதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியிருப்பதன் உள்நோக்கம், ஹேமந்த் கர்கரே மீதான நட்போ,  பாசமோ அல்ல. எதையாவது பேசி, அரசியல் வாதிகளின் கவனத்தையும் மக்களின் கவனத்தையும் திசைதிருப்ப வேண்டும் என்பதுதான். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் பாஜக உள்பட எந்தவொரு எதிர்க்கட்சியும் சற்றும் (more…)

போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்த இருவர் கைது

நர்சிங் படிப்பில் சேர விரும்பிய கிராமப்புற மாணவ, மாணவியருக்கு போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்து கொடுத்து, சேர்த்து விட்ட, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் உள்ளிட்ட இருவரை,சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை மருத்துவக் கல்லூரியில், 2006-07, 2007-08, 2009-10ம் கல்வியாண்டுகளில் செவிலியர் பயிற்சியில் சேர்ந்தவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 36 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் போலி என்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து,சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்.ஐ., சிவபாலன் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல்களை அடுத்து, போலி கல்வி சான்றிதழ் தயாரித்து வழங்கிய, ஆரணி, கண்ணமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சம்பத் (62) மற்றும் வேலூரை

தலையங்கம்: ஏன் இந்தத் தயக்கம்?

தினமணியில் வெளிவந்த தலையங்கம் தொடர்ந்து 18 நாள்களாக நாடாளுமன்றம் செயல்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்தான். நாடாளுமன்றம் செயல்படவில்லை என்றால், குடியரசு காயப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, ஊடகங்களில் "ஸ்பெக்ட்ரம்' முறைகேடுகளைப் பற்றித் தொடர்ந்து கண்டனம் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அதைக் கொஞ்சம்கூட சட்டை செய்யாமல் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதன் விளைவுதான் இப்போது பிரச்னை பூதாகரமாக மாறி, பிரதமரையே கபளீகரம் செய்துவிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்காமல் விட்டிருந்தால், முழுப் பூசணிக்காயும் நிச்சயமாகச் சோற்றில் மறைக்கப்பட்டிருக்கும். பிரச்னை வெளியானவுடன், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்படும் அரசாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? சம்பந்தப்பட்ட அமைச்சரைப் பதவி விலகச் சொல்லி, புலனாய்வுத் துறையின
This is default text for notification bar
This is default text for notification bar