கண்பார்த்து சிரிப்பவன் - காரியவாதி
காணாமல் சிரிப்பவன் - கஞ்சன்
கற்பனையில் சிரிப்பவன் - கவிஞன்
தெரியுமென்று சிரிப்பவன் - பசபசப்பாளன்
தெரியாதென்று சிரிப்பவன் - நடிகன்
இடம்பார்த்து சிரிப்பவன் - சந்தர்ப்பவாதி
இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் - கோமாளி
ஓயாமல் சிரிப்பவன் - பைத்தியகாரன்
ஓடவிட்டு சிரிப்பவன் - வஞ்சகன்
நீதியோடு சிரிப்பவன் - அறிஞ்சன்
செயல்கெட்டு சிரிப்பவன் - பச்சோந்தி
அருளுக்கு சிரிப்பவன் - ஆண்டி
அறியாமல் சிரிப்பவன் - மடையன்
மகிமையில் சிரிப்பவன் - மன்னன்
மாண்பில் சிரிப்பவன் - பண்பாளன்
கொடுக்கும்போது சிரிப்பவன் - சூழ்ச்சிக்காரன்
இன்பத்தில் சிரிப்பவன் - ஏமாளி
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
நன்றி – சஜிதா,
(ஓர் இணையத்தில் சஜிதா அவர்கள் எழுதியது )