
சுவைமிகு ரவா கேசரி – சமைத்து ருசித்து சாப்பிட
சுவைமிகு ரவா கேசரி - சமைத்து ருசித்து சாப்பிட
இனிப்பு உணவுகளில் எப்போதுமே இந்த ரவா கேசரி என்றுமே முதன்மையானது என்றால் அது மிகையாகாது. அந்த ரவா கேசரியை நாமே சமைத்து ருசித்து சப்பிட்டால் அதன் சுவை இன்னும் பல மடங்கு கூடும்.
இந்த ரவா கேசரி செய்ய தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப், தண்ணீர் - 2 1/2 கப், சர்க்கரை - 1 3/4 கப், நெய் - 3/4 கப், கேசரி கலர் - சிறிதளவு, ஏலகாய் தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - தேவையான அளவு, உலர் திராட்சை - 1 தேக்கரண்டி
எப்படி செய்வது?
வாணலியை அடுப்பில் வைத்து, நெய் 2 தேக்கரண்டி விட்டவுடன் உலர் திராட்சையையும் முந்திரியையும் போட்டு நன்கு வறுத்து அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்த வாணலியில் ரவையை கொட்டி உடன் நெய் 2 தேக்கரண்டி விட்டு அதன் வாசனை போகும் வரை பொன்னிறமாக வறுத்தவுடன், அதில் இரண்டரை கப் தண்னீரைச் சேர