
இளம் நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்
இளம் நடிகை தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்
பணம், புகழ் என்ற இரண்டையும் அள்ளித் தரும் அக்ஷய பாத்திரமாக திரைத்துறை இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆனால் அது ஒரு சிலருக்கு மட்டுமே கைகூடுகிறது. பலருக்கு அது வெறும் கனவாகி போவதால், தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த வரிசையில் மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியை சேர்ந்தவர் நடிகை சுபர்னா ஜாஷ். இவர் பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியான வங்க மொழிப் படமான ‘மயூர்பங்கி’ திரைப்படத்திலும் சுபர்னா ஜாஷ் நடித்துள்ளார்.
அந்த படத்திற்கு பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுபர்னா ஜாஷ் அவரது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுபர்ணாவின் உடலை அவரது