Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Lespian

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (23)

அன்புள்ள அம்மாவிற்கு— என் தந்தை, சொற்ப வருமானம் தரும் சுயதொழில் செய்கிறார்; அம்மா இல்லத்தரசி. என் பெற்றோருக்கு இரண்டு பெண்கள். நான் இளையவள். என் அக்கா ஒரு பெண்ணீயவாதி. நாங்கள் இருவருமே பட்டதாரிகள். எனக்கு திருமணமாகி, 15 ஆண்டுகள் ஆகிறது. என் அக்காவோ திருமணமே வேண்டாம் என இருக்கிறாள். என் கணவரும், வீட்டில் மூத்த மகன்; அவருக்கு இரு தங்கைகள். அவரது தந்தை, தாய் இருவரும் அரசுப் பணியில் இருக்கின்றனர். என் கணவர் சராசரி உயரம். கறுப்பு நிறமுள்ளவர். புகைபிடிக்கும் பழக்கம் தவிர, (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

மதிப்பிற்குரிய மேடம் அவர்களுக்கு — வணக்கம். என்ன பார்க்கிறீர்கள்? அம்மா, சகோதரி என சொல் லாமல், மேடம் என சொல்கிறேனே என்று பார்க் கிறீர்களா? பெத்த வளை, உடன் பிறந்த வளை தவிர, வேறெந்த பெண்ணையும், "அம்மா' என்றும், "சகோதரி' என்றும் அழைக்க விரும்ப வில்லை நான். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே யான ஒரே வேலை காதலிப்பது தான் என, திண்ணமாக நம்பு கிறேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்க ளிடம் விவரிக்க விரும்புகிறேன். படித்து விட்டு, அட்வைஸ் மழை பொழிந்து விடாதீர்கள். அறிவுரை எனக்கு மகா அலர்ஜி. வேண்டுமானால், அபிப்ராயம் சொல்லுங்கள். என் தற் போதைய வயது 58. மத்திய அரசு பணியிலிருந்து ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறப்போகிறேன். எனக்கு, இரு பெண் மேலதிரி காரிகள். முதலாமவள் ஐந்தடி, பத்து அங்குலம் உயரம் இருப்பாள்; பிங்க் நிறம். இரண்டாமவள் ஐந்தடி, எட்டு அங்குலம் உயரம்; கறுப்பு நிறம். அவர்களுக்கு இடையே

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவுக்கு — நான் ஒரு பெண். எனக்கு, மூன்று அண்ணன்கள். எங்கள் குடும்ப பிரச்னை ஒன்றுக்கு தீர்வு வேண்டி, உங்களின் முன் நிற்கிறேன். என் தந்தை, அரசு உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்றவர். அவர், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் தாயார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என் தாயார், தன் கடைசி காலத்தில், புத்தி சுவாதீனமற்றவராய் இருந்தார். அவர், அப்படி ஆனதற்கு காரணமே, என் தந்தையின் முறையற்ற செக்ஸ் ஆசை தான் என்று, எங்கள் குடும்பத்தில் ஒரு பேச்சு உண்டு. நான்கு பேருக்கும் திருமணம் செய்து வைத்த எங்கப்பா, மகள் வீடான என் வீட்டில், நிரந்தரமாக தங்கிக் கொண்டார். எங்கப்பா ஒரு சிவ பக்தர்; அவர், சிவ பூஜை செய்யாத (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு — வணக்கம். என் வயது 28; பெண். சிறுவயதில் போலியோ நோயால் இரு கால்களும் செயலிழந்து விட்டன. நான் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து உள்ளேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலே, அங்கு வேறொரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர், ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. அவருக்கு, தற்போது 50 வயது. அவர், என் மீது காட்டிய கருணை, பின் காதலாக மாறி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டோம். அந்த திருமணத்தில், (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

வெகுநாட்களாக கடிதம் எழுத வேண்டும் என்று யோசித்த பின், இதை எழுதுகிறேன். எனக்கு அம்மாவோ, அப்பாவோ கிடையாது. திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவர் ரொம்ப நல்லவர்; அவருக்கு, துரோகம் செய்து விட்டேன். என் கணவரின் நண்பரிடம் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. 15 வருடங்களாக இந்த தொடர்பு (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மா — நான் தென் தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது ஆண். எனக்கு திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. சென்னையில் இருவரும் சாப்ட்வேர் பணியில் இருக்கிறோம். என் தாய், தந்தை, என் அம்மா வழி பாட்டி மூவரும், ஒன்றாக சொந்த ஊரில் உள்ளனர். அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்; அம்மா ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். நான் ஒரே மகன். சந்தோஷமான என் குடும்பத்தில், தற்போது பிரச்னையே என் தாய் வடிவில் வந்துள்ளது. அம்மா... சொல்லவே, நினைக்கவே மனம் கூசுகிறது. என் தாய்க்கு 60 வயது. இப்போது, அவருடைய நடத்தையில் சந்தேகமாக இருக்கிறது என்று என் தந்தையும், பாட்டியும் சொல்கின்றனர். என் தாய் அழகான  உருவ அமைப்பு கொண்டவர். பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற பின், மூவரையும் என்னுடன் வந்து, சென்னையிலேயே தங்குமாறு சொன்னேன்; என் தாய் கேட்கவில்லை. பணிபுரிந்த பள்ளிக்கு தினமும் சென்று, அங்குள்ள ஆசிரியர்களிடம்,