லாரி அதிபர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு: வழக்கம் போல் லாரிகள் ஓடும்
லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக டில்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (லாரி உரிமையாளர்கள் சங்கம்) நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இன்று துவங்குவதாக இருந்த நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி மையங்களில் சீரான சுங்க வரி வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்த சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.லாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு, தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி புக்கிங் ஏஜன்டுகள் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதனால், தென் மாநிங்கள் முழுவதும் காஸ், மருந்து உள்ளிட்ட அத்தியாவச