Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Makkal Thilagam

எம்.ஜி.ஆர்., கைப்பட எழுதிய அறிவுரை!

கடந்த, 1979ம் ஆண்டு, மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி யில், பவழ விழாவில் கலந்து கொண்ட முத ல்வர் எம்.ஜி.ஆர்., பா ர்வையாளர் குறிப் பேட்டில் நீண்டதொரு கருத்தை, தன் கைப்பட எழுதினார். சாதாரணமாக ஒரு விழாவில் கலந்து கொ ள்ளும் வி.ஐ.பி.,க்க ளிடம், அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், தங்கள் நிறுவன பார்வையாளர் புத்தகத்தை நீட்டி, கருத்தை எழுதச் சொல்வது வழக்கம். அவர்களும் பெயரு க்கு ஏதோ இரண்டு வரி பாராட்டி எழுதி, (more…)

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு

எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங் கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் தில கம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந் திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபா லமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவ லப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ் நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின் னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக் (more…)

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை கண்டுகளியுங்கள்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும், ஜெயலலிதா கதாநாயகியாவும் நடித்து, வெளிவந்த வெற்றிகரமாக ஓடிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கூகுள் வழியே கண்டு களியுங்கள்

அடிமைப்பெண் – ஐ வரவேற்கும் மக்கள்

1969-ல் வெளிவந்த எம்.ஜி.ஆர்., நடித்து வெளிவந்த‌ அடிமைப்பெண்-ஐ காண நெல்லை தியேட்டரில் ரசிகர்கள் அலைமோதி வருகிறது. ரசிகர்களின் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் 2 வாரத்திற்கும் மேலாக படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்காலத்தில் புதுப் படங்கள் வெளிவந்த ஓரிரு நாட்களிலே பெட்டிக்குள் சுருண்டு விடுகிறது. ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வெளியான எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் திரைப்படத்தை இக்காலத்தில் மறு வெளியிட்டாலும் சக்கைப்போடு போடுவதைப்பார்க்கும் போது திரை ரசிகர்கள் எம்.ஜி.ஆர்.மீது கொண்ட அன்பைக்காட்டுவதாகவும், அதேநேரத்தில் பழைய திரைப்படங்கள் சாகா வரம் கொண்டிருப்பதை இருப்பதை பறைசாற்றுகிறது

எம்.ஜி.ஆர்.,க்கு கோயில்

சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள நாதமேட்டில் மறைந்த முன்னாள்  தமிழக முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர்.,க்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது. எந்த அரசியல் கட்சியின் பங்கேற்பும் இன்றி இக்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. கவிஞர் காசி முத்துமாணிக்கம் மற்றும் இதயக்கனி எஸ்.விஜயன் ஆகியோர் இக்கோயிலின் பூமி பூஜையை துவக்கி வைத்தனர். இந்த பூமி பூஜையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கலைவாணன், அவரது மனைவி சாந்தி, திருவேர்காடு சகாதேவன், விருகை மகாதேவன், கோவை துரைசாமி, திருவண்ணாமலை கலீல் பாஷா, கலைவேந்தன் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான எம்.ஜி.ஆர்., ரசிகர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.