தமிழகத்தில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்று கடந்த சில மாதங்களாக எழுந்து வந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், "காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி எப்போதும் போல் பலமாக உள்ளது' என, சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். பிரதமரை முதல்வர் கருணாநிதி நேற்று காலை (more…)
பிரதமர் மன்மோகன் சிங் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்றிரவு சென்னை வருகிறார். அவர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். பின் அவரை முதல்வர் கருணாநிதி இன்றிரவே சந்திக்க விருக்கிறார். நாளை காலை இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைக்க எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். பிரதமர் வருகை யை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகளவு பலப்படுத்தப் பட்டுள்ளதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீனம்பாக்கம் விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன•