Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Medicals

பற்களை பாதுகாக்க சில யோசனைகள்

சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும். சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங்களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்குகின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத் தீனீயின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.  பழங்கள், பச்சைக்காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம் செய்துவிடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும். உணவுவேளையில் நீங்கள் உண்ண வேண்டிய கடைசிப் பொருள் நறுக்கப்பட்ட பச்சைக் காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும்கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம். காலையில் மட்டும் பல்துலக்கினால் போதாது. காலை, மாலை இரண்டு வெளையும் பல்

பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் இஞ்சி,வெங்காயம், பூண்டு

பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுகிறது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இடைவிடாத சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளது. இது ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தொற்று நோய். முதன் முதலில் மெக்சிகோ நாட்டில்தான் பன்றிக்காய்ச்சலுக்கான நோய் கிருமி உருவானது. நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கிருந்து காற்றின் மூலம் மற்ற உலக நாடுகளுக்கும் பரவியது. இந்த நோய் தாக்கப்பட்ட மனிதன் இருமல், தும்மல் மூலம் நிமோனியா காய்ச்சலுக்கு ஆளாகிறான். பிறகு நுரையீரல் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழுக்க ஆரம்பிக்கும். பன்றி காய்ச்சலுக்கு டேமி புளு மாத்திரை எடுத்துக்கொண்டால் நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று ஆங்கில மருத்துவர்கள்

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி

புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது. "பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறை

ஆயுள் கூட ஆயிலை குறை

மனித குலத்தின் மிகப் பெரிய எதிரி எண்ணெய். இன்று பல நோய்களுக்கு மூல காரணம் எண்ணெய் கலந்த உணவுகள் தான். எல்லா எண்ணெயும் கொழுப்பு தான். நெய், வெண்ணெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்கள் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். சூரியகாந்தி போன்ற மற்ற எண்ணெய்கள் ஈரல் வழியாக சென்று, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். எனவே எதுவாயினும் அளவாக பயன்படுத்துதல் நல்லது. ஜீரோ கொலஸ்ட்ரால் என்பது தவறு. எல்லா எண்ணெயும் ஒன்று தான். ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி., – 20 மி.லி., போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் எப்படி கலோரியை அதிகப்படுத்துகிறது என்றால், 10 மி.லி., எண்ணெய் 90 கலோரி, ஒரு சாதா தோசை 80, ஒரு பூரி 260, வடை, பஜ்ஜி, சிப்ஸ் போன்றவை 200 – 250, பிரியாணியில் 6,550, ஒரு பிளேட் பிரியாணியில் 1,600 கலோரிகள் உள்ளது. அதிக எண்ணெய் இரத்த குழா

மனித எலும்புகள்

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங்கள்.  இந்த உயிரினங்களுக்கு எலும்புகள் தான் உடலமைப்பை கொடுக்கின்றன.  அவற்றின் தகவமைப்புக்கு ஏற்ப எலும்புகள் அமைந்துள்ளன.  ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனிதனும் அடக்கம்.  மனித எலும்புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை.  அவைதான் மனிதனை  நிமிர்ந்து நடக்கச் செய்கின்றன.  மனிதனின் செயல்பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன.  இந்த மனித எலும்புகளின் தன்மைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். மனித எலும்புகள் எலும்பு என்பது மனிதனின் உடலுக்குள் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும்.  உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலைத் தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள்.  மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வது எலும்புகள் தான்.  ஒரு இடம் விட்டு ஒரு இடத்திற்கு நகர வைப்பதும் எலும்புகள்தான்.  இவைகள் பாதிக்கப் பட்டால் மனிதன் அலங்கோலமான ஜந்துவாக மாறி

தேன் சேகரிப்பு முறை – வீடியோவில்

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட, சாகா வரம் பெற்றது எது தெரியுமா?  தேன் தான் தேனை பார்த்திருப்பீர்கள், தேனை ருசித்திருப்பீர்கள் ஆனால் அது எப்படி எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதோ உங்களுக்காக‌ தேன் சேகரிப்பு முறை - வீடியோவில்

தேன் மருத்துவம்

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க  வேண்டிய தேன் உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது. சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது. கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்பட

மாம்பழம் – மரு‌த்துவ‌ம்

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் 'சி'-யும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலு

உணவுப் பொருட்களும் அவற்றின் தன்மைகளும்

உடற்சூட்டை தணிப்பவை பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய், இளநீர் ருசியின்மையைப் போக்குபவை புதினா, மல்லி, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, மாவடு, திராட்சை, வெல்லம், கருப்பட்டி, மிளகு, நெற்பொறி சிவப்பணு உற்பத்திக்கு புடலைங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம் கேழ்வரகு,பசலைக்கீரை மருந்தை முறிக்கும் உணவுகள் அகத்தி, பாகற்காய், வேப்பிலை, நெய், கடலைப்பருப்பு, கொத்தவரை, எருமைப்பால் . சோம்பு, வெள்ளரிக்காய் விஷத்தை நீக்கும் உணவுகள் வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், காயம் பித்தம் தணிப்பவை சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைவற்றல் செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை -----   ஆக்கம் சிவகுமார்

காமாலைக்கு எலுமிச்சை

எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, கண் நோய், ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவை குணப்படும். எலுமிச்சம் பழங்களை ஊறுகாய் போடும் முறை தவறானது. கிச்சிலி மற்றும் நார்த்தங்காய் போன்ற எலுமிச்சங் காய்களையே ஊறுகாய் தயார் செய்ய சிறந்ததாகும். எலுமிச்சம் பழத்தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவுக்கு பொரித்த படிகாரம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் தேமல் என்ற சரும நோய்க்கு இப்பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து இரவு நேரத்தில் தேகத்தின் மேல்பூசி காலையில் குளித்து வர விரைவில் தேமல் மறையும். Thanks Sivakumar's Sidha Maruthuvam, Sivastar

பாம்புக்கடி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது?

பாம்பின் உமிழ்நீர்ப்பையில் சேமித்து வைக்கப்படும் எச்சில்தான் விஷமாக உருவாகிறது. தவளை, எலி போன்றவற்றைப் பிடிக்கும்போது, அவற்றை செயலிழக்கச் செய்ய இந்த விஷத்தை பாம்புகள் பயன்படுத்துகின்றன. இதை விஷம் மனிதன் போன்ற விலங்குகளை தற்காப்பின்பொருட்டு கடிக்கும்போது அவற்றைக் கொல்லவும் பயன்படுத்துகின்றன. விஷப்பாம்புகள் மனிதனைக் கடிக்கும்போது, அவற்றின் விஷம் இரத்தத்தில் கலந்ததும், நரம்பு மண்டலத்துக்குப் பரவி, நரம்புகளை செயலிழக்கச் செய்யும் வேலையில் ஈடுபடுகிறது. இதனையடுத்து கை, கால்கள் மரத்துப்போய், இரத்தம் உறைந்து மரணம் சம்பவிக்கிறது. Thanks Keetru

மருத்துவக் குறிப்புகள்

நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். உதட்டு வெடிப்பு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும். அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றைய