
குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி – கீர்த்தி சுரேஷை மருமகளாக்க
குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி - கீர்த்தி சுரேஷை மருமகளாக்க
கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு சுமார் 5 மாதங்கள் கடந்து விட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் திடீரென்று கிளம்பிய கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 4 மாதங்களாக படப்பிடிப்பு முடங்கி இருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருவதாக