Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Mozilla Firefox

நீங்கள் அடிக்கடி browser மாற்றுபவரா? அப்படியானால் ,,,

நீங்கள் அடிக்கடி browser மாற்றுபவரா? அப்படியானால் நீங்கள் சேமித் துவைத்துள்ள புக்மார்க்கினை எப்படி மா ற்றுவீர்கள்? இது வரை காலமும் internet explore or firefox பாவித்திருப்பீர்கள் அதில் உங்களிட்கு தேவையான இணைய முக வரிகளை புக்மார்க்கில் சேமித்து வைத்தி ருப்பீர்கள் அவை அணைத்தையும் மீண் டும் டைப்செய்து சேமிப்பது என்றால் முடி யாத காரியம் ஒரே நிமிடத்தில் அதனை அப்படியே மாற்றும் வசதி கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் இதனை (more…)

20 ஆண்டுகளாக வலம் வரும் பிரவுஸர்கள்

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், டிசம்பர் மாதத்தில் இணையத்திற்கு நம்மை வழி நடத்தும் பிரவுசர் வெளிவந்தது. அதனை வெளியிட்ட டிம் பெர்னர்ஸ் லீ, அதற்கு World Wide Web என்றே பெயர் சூட்டி இருந்தார். இன்று பல நிறுவனங்களின் பிரவுசர்கள் நம்மை போட்டி போட்டு அழைக்கின்றன. இந்த பிரவுசர் களுடனே வரும் ஆபத்துக்களும் நம்மை உஷார் படுத்துகின்றன. இருப்பினும் இவை இன்றி நாம் நம் வாழ்வை இயக்க முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம். இந்த (more…)

விண்டோஸ் வேகமாக இயங்க . . . .

நம்மில் 90% பேர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறோம் என்பது, பன்னாட்டளவில் அறியப்பட்ட உண்மை. அதன் இயக்கம், அதனுடன் நமக்கேற்பட்ட பழக்கம் அவ்வாறான ஓர் இடத்தை அதற்கு அளித்திருக்கிறது. விண்டோஸ் இயக்கத்தை இன்னும் வேகமாக இயக்கி, திறன்களை எளிதாகப் பெற இங்கு டிப்ஸ்கள் தரப்படுகின்றன. 1.மினிமைஸ்: பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்குகையில், பல விண்டோஸ்கள் திறக்கப்படும். இவை அனைத்தையும், திரையில் திறந்து வைத்தவாறே இயக்க வேண்டாம். எந்த விண்டோவில் பணியாற்று கிறீர்களோ, அதனை மட்டும் திறந்து வைக்கவும். மற்றவற்றை மினிமைஸ் செய்து வைக்கவும். 2. இமெயில் போல்டர்: இமெயில் கிளையண்ட் எதுவானாலும், மொத்தமாக அவற்றை ஒரே இன்பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். இதிலும் போல்டர்களை ஏற்படுத்தி, மெயில்களைப் பிரித்து வைக்கவும். அவ்வப்போது படித்து, முக்கியத்துவம் இழந்த மெயில்களை நீக்கவும். 3. சரியான பயன்பாடு: போல்டர

அச்சிடுகையில் எழுத்தின் அளவைப் பெரிதாக்க.

டெக்ஸ்ட்டின் எழுத்தளவினை அதிகப்படுத்துவதும் குறைப்பதுவும் பல வழிகளில் மேற்கொள்ளலாம். இது ஒவ்வொரு புரோகிராமிற்கும் ஒரு மாதிரியாக இருக்கும். பிரிண்டர் ஒன்றை இந்த அளவில் தான் அது எழுத்துக்களை அச்சிட வேண்டும் என வரையறை செய்திட முடியாது. முதலில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். திரையில் காணப்படும் எழுத்து அளவும், அதனை அச்சிடும் போது தாளில் கிடைக்கும் எழுத்து அச்சின் அளவும் ஒரே மாதிரியாக இருக்காது. மானிட்டர் திரையில் மிக எளிதாக, எழுத்தின் அளவினை மாற்றிப் பார்க்கலாம். ஆனால் இதனால் அது அச்சிடப் படுகையில் மாறி அச்சாகாது. எடுத்துக் காட்டாக, ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை, மேலும் கீழுமாகச் சுழற்றினால், மானிட்டர் காட்சித் தோற்றத்தில் எழுத்தின் அளவு அதிகமாகவும் குறைவாகவும் தோன்றும். ஆனால் புரோகிராமில் செட் செய்தபடி தான் அச்சில் எழுத்தின் அளவு இருக்கும். இமெயில் கடிதங்களைத் தான், நம்மில

விக்கிலீக்ஸ் இணையதளம் பகிரங்கமாக, ரகசிய ஆவணங்கள் வெளியிட்டது: அலறும் அமெரிக்கா;

அமெரிக்காவின் அந்தரங்க ரகசியங்களை கண்காணித்து இந்த நாட்டின் உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட விஷயங்கள் என்ன, என்ன என்பதை விலாவாரியா புட்டு, புட்டு வைத்திருக்கிறது. இது அமெரிக்காவின் பாதுகாப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் , தோழமை நாடுகளுடனான நட்புறவில் பிளவை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈராக் போர் தொடர்பான ஆவணங்களை இந்த விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி 2 லட்சத்து 51 ஆயிரத்து 287 ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில் அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் வெள்ளை மாளிகையுடன் என்ன, என்ன விவரம் தொடர்பு கொள்ளப்பட்டது. என்றும் சீனா, பிரிட்டன் ரஷ்யா , இந்தியா, ஆப்கன், ஈரான், ஈராக், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் தொடர்பான ஆவணங்கள் முக்கியமானது ஆகும்.

யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல், தீர்வு

கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை இணைக்க, பேரலல், சீரியல் போர்ட் என இருந்த காலம் போய், இப்போது கம்ப்யூட்டர் ஒன்றில், குறைந்தது நான்கு யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டு, அதற்கேற்ப, கீ போர்டு, மவுஸ், வெப்கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்கள் அனைத்தும், அதன் வழி இணைப்பவையாய் கிடைக்கின்றன. இவற்றை இணைக்க முயற்சிக்கையில், பயன்படுத்துகையில் பல சந்தேகங்களையும்   பிரச்னைகளையும்  வாசகர்கள்  எதிர்கொள்கின்றனர்.  பல கடிதங்கள் இவை குறித்து நம் அலுவலகத்திற்கு வருகின்றன. அவற்றில் சில பிரச்னைகளுக்கு இங்கு தீர்வுகளைக் காணலாம். கம்ப்யூட்டரில் தரப்படும் யு.எஸ்.பி. போர்ட்டில், முதலில் USB 1.1 வகை நமக்குக் கிடைத்து வந்தது. இவை விநாடிக்கு  1.5 எம்பி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகத்தில் இருந்தன.   பழைய வகை   சீரியல் மற்றும் பேரலல் போர்ட் இணைப்புகளுக்கு மாற்றாக யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தினு

விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அம்பலம்

விக்கிலீக்ஸ் இணையதளம் தனது இணையதளத்தில் அம்பலப்படுத்திய தகவல், அமெரிக்க தூதரக வட்டாரத்தில் சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க தூதரகம் வைத்துள்ள பட்டப்பெயர்களின்  விபரம் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு ஆடைகள் இல்லாத பேரரசர் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு பட்டப்பெயர் வலிமையற்ற, செயல்திறனற்ற ஐரோப்பிய தலைவர். ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவுக்கு புடினின் கையாள்,     புடினுக்கு ஆல்பா டாக் ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாதுக்கு ஹிட்லர். வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் -இல் மனவலிமையற்ற வயதானவர் என்றே அமெரிக்க தூதரகத்தால் மேற்சொன்ன தலைவர்கள் அழைக்கப்படுகின்றனர். இதன் தொடர்புடைய புதிய செய்தி விக்கிலீக்ஸ் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா  

அழ வைக்கும் அச்சுப்பொறி (Printer)

கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பல வகைகளில் தீர்வுகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், அச்சுப் பொறிகளான பிரிண்டர்களின் வேலையில் தடங்கல் ஏற்படுகையில், நாம் சந்திக்கும் இடர்ப்பாடுகள் நம்மை சில வேளைகளில் அழ வைக்கின்றன. எப்போது விரைவாக ஆவணங்களை அச்செடுத்து,  அடுத்த வேலைக்குச் செல்லலாம் என்று திட்டமிடுகிறோமோ, அப்போது பார்த்து, பேப்பர் ஜாம், எர்ரர் மெசேஜ் எதுவும் காட்டாமல், அச்சிட மறுக்கும் நிலை, டோனர் சிதறிப் போய், அச்சுப் படிவம் பாதியாக அச்சிடும் நிலை என நம் பொறுமையை எல்லைவரை சென்று சீண்டிப் பார்க்கும் பல சூழ்நிலைகள் இந்த அச்சுப் பொறிகளால் ஏற்படுத்தப் படுகின்றன. இவற்றிற்கு என்ன காரணம்? என்ன காரணம் என்று பார்க்காமல், யார் காரணம் என்று பார்ப்போம். நாம் தான் காரணம். சற்றுக் கவனமாக இருந்தால், இவற்றை நாம் பொறுமையாகச் சமாளிக்கலாம். அந்த வழிகளை இங்கு காணலாம். 1. பேப்ப

விக்கிலீக்ஸ் இணையதளம் பகிரங்க மிரட்டல்

விக்கிலீக்ஸ் இணையதளம், தனது இணையதளத்தில்  ஈராக்  மற்றும் ஆப்கன் போர்களில் அமெரிக்க ராணுவம் பல்வேறு தகவல்களை மூடி மறைத்து விட்டது.  விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் அந்த உண்மைத் தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ரஷ்யா, துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் முன்பைவிட தற்போது அதிக பைல்களை வைத்திருப்பதாகவும் அவற்றை வெளியிடப்போவதாகவும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
This is default text for notification bar
This is default text for notification bar