'தீமை இருள் அகன்று, நன்மை ஒளி வீசுவதை மையக் கருத்தாக வைத்து கொண்டாடப்படும் தீபாவளி திருநா ளில், உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி களைகட்டட்டும்'' என்று உளப்பூர்வமான வாழ்த்துக்களோடு செல்லம் வழ ங்கும் ரெசிபிகளை, கலக்கலாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
தூத் பேடா
தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்க ரை-ஒன்றரை கப், சோள மாவு அல்லது மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்), பொடித்த ஏலக்காய் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பாலைக்கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சவும். பால் பாதி அளவாக ஆனபின் சர்க்கரை சேர்க்கவு ம். பிறகு, பொடித்த ஏலக்காய் சேர்த்து, சோள மாவு அல்லது மைதா மாவு சேர்த்துக் கிளறவும். கெட்டிப்பதம் வந்ததும், தேவையான (more…)