Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Napoleon

ஒரு சாமானியன், சக்ரவர்த்தியான‌ சரித்திரம் பற்றிய சுவாரஸ்யத் தகவல் ! ! !

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரா ன்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட். அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால் நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெ ளயம். இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கி யமான வேற்றுமை இருந்தது. ஒரு மன் னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்க த்தை ஆண்டான் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிற ந்தும் பிரான்ஸுக்கு மன்னனானான் நெப்போலியன். உலக வரலாற்றில் ஒரு எழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு தேசத்திற்குச் சக்ரவர்த்தியானது அதுதான் முதல் முறை. விதியை வென்ற நெப்போலியன் என்ற (more…)

மனோதிடம்

நெப்போலியன் தனது சிறுவயதில் ராணுவ விடுதியில் தங்கி படித்துக் கொண்டு இருந்தான். அப்போது அறையில் அவர் கூடத் தங்கியிருந்த மற்றொரு மாணவன் தன்னுடைய அழகான பைய் ஒன்று காணாமல் போய்விட்டதாக மேலதிகாரியிடம் புகார் கூறினான். “யார் மேலாவது உனக்கு சந்தேகம் உண்டா?” என்றார் மேலதிகாரி. “நெப்போலியன் மேல்தான் எனக்கு சந்தேகம்” என்றான் அந்த சக மாணவன். உடனே அந்த அதிகாரி நெப்போலியனை தன்னோடு அறைக்கு அழைத்தார். நெப்போலியன் மெதுவாக மேலதிகாரியின் அறைக்குள் நுழைந்தான். மேலதிகாரி நெப்போலியனை விசாரிக்காமலேயே தனது கையில் பிரம்பை எடுத்தார். சரம் வாரியாக அடித்துத் தள்ளினார். நெப்போலியனை “ஏன் திருடினாய்? இனி இது மாதிரி தவறு செய்வாயா?” என்று கேட்டு நல்ல உதை! அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான் நெப்போலியன். அதற்கு பிறகு கொடுத்த தண்டனையையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான். சிறிது நாட்கள் கழித்து