
உலக கோப்பை கிரிக்கெட்: கடைசி இடத்தில் இந்தியா, முதலிடத்தில் பாகிஸ்தான்
உலக கோப்பை கிரிக்கெட் - கடைசி இடத்தில் இந்தியா, முதலிடத்தில் பாகிஸ்தான்
உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 45 போட்டிகளில் நேற்று வரை 30 போட்டிகள் முடிவடைந்துள்ளது. புள்ளிப் பட்டியலில் தலா 6 போட்டிகளில் விளையாடிய 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. அரையிறுத்திக்கு முன்னேறும் அணிகள் என்று பார்த்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நான்காவதாக உள்ளே நுழைவதற்கு இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி இருக்கும். அடுத்து வரக்கூடிய போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளின் நிலை தெரியவரும். ஆ