
சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது – ஓரலசல்
சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது - ஓரலசல்
எந்த வகையான ஒப்பந்தமாக இருந்தாலும் சம்பந்தப் பட்டவர்களின் கையெழுத்து மட்டும் போதாது. அவர்கள் இருவரும் இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்பதற்கு நேரடி சாட்சியாக உறவினர்களோ அல்லது நண்பர்களோ அவர்களில் இரு நபர்களின் கையெழுத்து பெறப்பட வேண்டும். அத்தகைய சாட்சிக் கையெழுத்து போடும் போது, பல சாட்சிகள், வெறுமனே கையெழுத்து மட்டுமே போட்டு விடுகின்றனர். இதனால் பிற்காலத்தில் அந்த ஒப்பந்தம் செய்து கொண்ட அந்த இருபார்ட்டிகளுக்கிடையே ஏதேனும் பிரச்சினைகள் வரும்போதோ அல்லது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டி வந்தாலோ, அந்த சாட்சியை தேடிப் பிடிக்க முடியாது காரணம் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டிருப்பதால், இந்த கையெழுத்தை மட்டுமே வைத்துக்கொண்டு சாட்சியை எப்படி கொண்டு வருவது என்ற இக்கட்டான நிலைக்கு அந்த இருபார்ட்டிகள் தள்ளப்படுவர்.