பகவத் தியானத்தில் ஈடுபட்டவர்கள், கண்ணை மூடி மவுனமாக தியானம் செய்வர். கண்ணை திறந்து கொண்டிருந்தால், பல விஷயங்களை பார்க்க தூண்டும்; அதனால், தியானம் கலையும். அதேபோல வாய், மூக்கு, அங்கங்கள் மூலமாகவும் தியானத்துக்கு பங்கம் ஏற்படலாம். தியானத்துக்கு தனிமை முக்கியம். இப் படி புலன்களை அடக்கி, தியானம், தவம் செய்பவர்களை ஞானிகள் என்று அழைப்பர். அஞ்ஞானத்தில் உழல்பவர்களுக்கு இடையே செல்வ செழிப்பு, ஏழ்மை, வறுமை, மேலான பிறவி, இழிந்த பிறவி போன்ற வேற்றுமைகள் இருக்கும். தியானத்தில் ஈடுபட்டு, சமாதி நிலையில் உள்ளவர்கள், இது போன்ற மாயாபேதங்களை உணர மாட்டார்கள். இந்த நிலையில் குறைபாடு ஏற்பட்டால், அதற்கு காரணம் மனம் தான். இந்த சக்தி, சிவசக்தியால் நடைபெறுகிறது. எட்டு போன்ற சொல் அஷ்டமூர்த்தியை குறிக்கும். நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இந்த எட்டு ஜட வஸ்துகளும் ஈசனுடைய சொ