பேஸ்புக் இணையதளம், தன் 50 கோடி நேயர்களுக்காக, இமெயில் சேவையினைத் தொடங்குவதாக அறிவித்தது, இணைய உலகில் பெரிய செய்தியாக வலம் வருகிறது. இன்னும் இரண்டொரு மாதங்களில் இது கிடைக்கும் என இதன் தலைமை நிர்வாகி ஸக்கர் பெர்க் அறிவித்துள்ளார்.
இதில் இமெயில் என்பது பேஸ்புக் மெசேஜஸ் (Facebook Messages) என்பதின் ஒரு பகுதியாகத் தான் இருக்கும். இந்த சிஸ்டத்தில் இமெயில், பேஸ்புக் மெசேஜ், எஸ்.எம்.எஸ். மற்றும் சேட் எனப்படும் அரட்டை வசதி ஆகிய அனைத்தும் கொண்டதாக அமையும். இவற்றின் மூலம் தங்களுக்குப் பிடித்த வகையில், தகவல்களையும் கோப்புகளையும் வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ளலாம். இமெயில் கணக்கு வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு, அவர்கள் பயனாளர் பெயர் இணைந்த @Facebook.com என்ற இமெயில் முகவரி தரப்படும். இதனைப் பயன்படுத்தி, பேஸ்புக் மட்டுமின்றி வேறு எந்த இமெயில் நெட்வொர்க் அக்கவுண்ட்டிற்கும், மெயில் அ