
தேர்தல் தேற வேண்டுமானால்…
தேர்தல் தேற வேண்டுமானால்…
இந்த (2019, மே) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்
எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை நமது நாட்டில் தேர்தல் ஏழு கட்டங்களாக 40 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் இடைவெளி அவசியந்தானா?
பாதுகாப்பு, கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாத சூழல்… தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான ஆட்கள் பற்றாக்குறை… குறைந்த அளவிலேயே வாக்குச்சாவடிகள்.. என்றெல்லாம் நியாயமான காரணங்களை தேர்தல் ஆணையம் முன் வைக்கிறது.
ஆனால் தேர்தல் முடிவதற்குள் காவல்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் கட்சியின் தொண்டர்களும் படும்பாடு வேதனைக்குரியது. இது தவிர வாக்குப் பெட்டிகளுக்கு வேறு காவல் நிற்க வேண்டும். எல்லாவற்றையும் விட அரசு திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி விடுதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை மீறியு