
திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்
திராவிடத்தைத் தூற்றாதீர்! - உண்மையை உணருங்கள்
நான் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்குவதற்காக இந்த பதிவை பகிரவில்லை. திராவிடத்தின் உண்மையை உணராதவர்களுக்கு உணர்த்தவே இந்த பதிவு
மானங்கெட்டத் தமிழனே! எனத் தொடங்கி, உலக மக்களின் பார்வை படும். மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, பெரியார் சிலையென்று எல்லா எளவும் இருக்குது. எங்கடா அந்த ராஜராஜ சோழன் சமாதி? எங்கடா அந்த ராஜேந்திர சோழன் சமாதி? எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை? எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்? எங்கடா போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம்? எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை? ……….. என்று கேள்விகளாக வரிசைப்படுத்தி, அவர்களுக்கு என்ன பெருமை செய்தீர்கள் என்று கேட்டுவிட்டு, திராவிடத்தையும், திராவிடத் தலைவர்களையும் கொச்சைப் படுத்தி, நீண்ட நெடும் பதிவு ஒன்று என் வாட்ஸ் அப்பில் உள்ள குழு ஒன்றில் பதிவி