Tuesday, November 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Police station

அப்பனாவது, ஆத்தாளாவது… வனிதா விஜயகுமார்

நானும், என் கணவரும் அசிங்கப்பட்டதற்கு பின் விஜயகுமாரை நான் சும்மா விடமாட்டேன். இரண்டு நாள் என் புருஷனை சிறையில் தள்ளிவிட்டனர். இந்த விஷயத்தில் அப்பாவாவது, ஆத்தாளாவது...  உண்மை, நியாயம்தான் எனக்கு வேண்டும், என்று வனிதா விஜயகுமார் ஆவேசமாக கூறினார். தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடமும் வனிதா விஜயகுமார் புகார் அளித்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:- புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை நேரில் சந்தித்து, விளக்கம் அளித்தேன். என்ன நடந்தது என்பதை நான் கமிஷனரிடம் எடுத்துக் கூறினேன். "நான் செய்ததில் ஏதாவது தவறு இருக்கிறதா, மீடியாவில் பேசக் கூடாதா? என, கமிஷனரிடம் கேட்டேன். அதற்கு அவர், "உங்களுக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது. இன்றைக்குத் தான் இந்த வழக்கு என் கையில் வந்திருக்கிறது. கண

இனி மேல் தான் பிரச்னை ஆரம்பம்: நடிகர் விஜயகுமாருடன் ஏற்பட்ட மோதலில், அவரது மகள் வனிதா

நடிகர் விஜயகுமாருடன் ஏற்பட்ட மோதலில், இனி மேல் தான் பிரச்னை ஆரம்பம் என அவரது மகள் வனிதா ஆவேசமாக தெரிவித்தார். நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று ஆனந்தராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா. தனது மூத்த கணவர் மூலம் பிறந்த 9 வயது மகன் ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து விஜயகுமார் பறிக்க முற்பட்டதாக வனிதா குற்றம் சாட்டினார். இப்பிரச்னையில் தன்னை தாக்கியதாக நடிகர் விஜயகுமார் அளித்த புகாரில், ஆனந்த ராஜ் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் குறித்து தினமலர் இதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், கடந்த 2 நாட்களாக தான் இதுவரை எந்த நாளிதழுக்கோ, அல்லது டி.வி.,க்கோ பேட்டி ஏதும் அளிக்கவில்லை என்றும், தனது பிரச்னைகளை தாண்டி, தனது கணவரை மீட்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மட்டுமே போராடியதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை ஒரு