Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Politician

திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்

திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்

திராவிடத்தைத் தூற்றாதீர்! - உண்மையை உணருங்கள் நான் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்குவதற்காக இந்த பதிவை பகிரவில்லை. திராவிடத்தின் உண்மையை உணராதவர்களுக்கு உணர்த்தவே இந்த பதிவு மானங்கெட்டத் தமிழனே! எனத் தொடங்கி, உலக மக்களின் பார்வை படும். மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, பெரியார் சிலையென்று எல்லா எளவும் இருக்குது. எங்கடா அந்த ராஜராஜ சோழன் சமாதி? எங்கடா அந்த ராஜேந்திர சோழன் சமாதி? எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை? எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்? எங்கடா போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம்? எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை? ……….. என்று கேள்விகளாக‌ வரிசைப்படுத்தி, அவர்களுக்கு என்ன பெருமை செய்தீர்கள் என்று கேட்டுவிட்டு, திராவிடத்தையும், திராவிடத் தலைவர்களையும் கொச்சைப் படுத்தி, நீண்ட நெடும் பதிவு ஒன்று என் வாட்ஸ் அப்பில் உள்ள‌ குழு ஒன்றில் பதிவி
ஒரு வார்த்தையை வைத்து அரசியல் செய்வது விரும்பத்தகாதது வெறுக்கத்தக்கது

ஒரு வார்த்தையை வைத்து அரசியல் செய்வது விரும்பத்தகாதது வெறுக்கத்தக்கது

ஒரு வார்த்தையை வைத்து அரசியல் செய்வது விரும்பத்தகாதது வெறுக்கத்தக்கது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதெல்லாம் எதைப் பேசினாலும், பாடினாலும், எழுதினாலும் அதில் உள்ள‍ ஒரு வார்த்தையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு சிலர் அரசியல் செய்வது விரும்பத்தகாதது, வெறுக்கத்தக்கது. இந்த பதிவை ஒரு நடுநிலையானனாக இருந்து நான் எழுதுகிறேன். ஜனநாயக நாட்டில் ஒரு நடிகர், பாடல் ஒன்றை பாடினால், அந்த பாடலில் வரும் ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். ஒரு நடிகை, கேள்விக்கு அளித்த‍ பதிலில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். ஒரு பாடலாசிரியர் ஆன்மீகம் குறித்து பேசும்போது 100 வார்த்தைகள் பெருமையாக‌ பேசிவிட்டு, ஒரு வார்த்தை, எதிர்மறையாக இருப்பதாக வேறு ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டியதில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்.