Sunday, May 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Prime Minister

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜா மந்திரியானது குறித்து பிரதமர் தகவல்

ஸ்பெக்ட்ரம் மோசடியில் கைதான ராஜா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சரானதற்கு காரணம் யார் என்ற தகவலை, பிரதமர் மன் மோகன் சிங் நேற்று தெரி வித்தார். ஸ்பெ க்ட்ரம் விவகாரத்திலும் மவுனம் கலைத்தார். "பார்லி மென்ட் கூட்டுக் குழுவை சந்திக்கவும் தயார்' என, அறிவித்தார். தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செய்தி ஆசிரியர்களை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்து பிரதமர் பேசியதாவது:கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த (more…)

இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து . . .

இந்திய அறிவியல் கழக 98-வது மாநாடு சென்னை காட்டாங் கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா இன்று காலை நடந்தது. பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.  மாநாட்டில் அவர் 27 இந்திய மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கினார். பின்னர் அறிவியல் மாநாட்டு விழா மலரை பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநாட்டின் மூலம் (more…)

சென்னையில் பிரதமர் மன்மோகன் சிங் . . . .

பிரதமர் மன்மோகன் சிங் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்றிரவு சென்னை வருகிறார். அவர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். பின் அவரை முதல்வர் கருணாநிதி இன்றிரவே சந்திக்க விருக்கிறார். நாளை காலை இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைக்க எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். பிரதமர் வருகை யை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகளவு பலப்படுத்தப் பட்டுள்ளதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீனம்பாக்கம் விமான நிலையம், கிண்டி ஆளுந‌ர் மாளிகை, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன•

இந்தியா – சீனா இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் . . .

இந்தியா - சீன பிரதமர்கள் இடையே பேச்சுவார்த்தை துவங்கியது. முதல் கட்டமாக காஷ்மீருக்கு தனி விசா வழங்கியுள்ள விவகாரம் , அருணாச்சப் பிரதேசத்தில் சீன படை ஊடுருவல் போன்ற விவகாரங்கள் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக‌ தெரிகிறது. மேலும் இந்தியா - சீனா இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கலாச்சாரம், மீடியா, பசுமை தொழில் நுட்பம், வங்கித்துறை உள்பட 6 துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

தமிழக பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இலங்கையில், ராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடந்த சண்டை, கடந்த ஆண்டு ஓய்ந்தது. புலித் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால், அந்த இயக்கம் வலு விழந்து விட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல், தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாகவும், உஷார் நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய உளவுத்துறை மூலம், தமிழக காவல் துறைக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுத்துறையிடம் மேலும்   (more…)

பிரதமராக ராகுல்காந்தி . . .

மும்பையில் நடந்த விழாவில் கலந்துகொண்ட‌, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், "நாட்டின் அடுத்த பிரதமராக ராகுல்காந்தி  பொறுப் பேற்றால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமா' என, கேட்க, அதற்கு "கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவேன். நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கான வாய்ப்பு ராகுலுக்கு உள்ளது. இருந்தாலும், ஜனநாயக நாட்டில், மக்கள் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.

இந்தியாவில் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அமெரிக்க அதிபர் ஒபாமா 4 நாள் சுற்றுப்பயணம்:

ஒபாமா அமெரிக்க அதிபர் ஆனதற்கு பிறகு முதல் முதலாக அவர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார். அவருடன் மனைவி மிச்சேலியும் வருகிறார். 6-ந்தேதி இந்தியா வரும் அவர் 4 நாட்கள் இங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஒபாமா சுற்றுப்பயண முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து 5-ந்தேதி புறப்படும் ஒபாமா 6-ந்தேதி மும்பை வந்து சேருகிறார்.புகழ்பெற்ற தாஜ் ஓட்டலில் அன்று தங்குகிறார்.மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தாஜ் ஓட்டலும் இலக்கானது.மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் ஓபாமா அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கு நடக்கும் இந்திய- அமெரிக்க வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். 7-ந்தேதி காலை மும்பையில் உள்ள ஒரு பள்ளிக்கு செல்லும் அவர் பள்ளி குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடுகிறார். மும்பையில் உள்ள காந்தி

அயோத்தி வழக்கு தீர்ப்பின் விவரம்

அயோத்தி வழக்கு தீர்ப்பு சுருக்கம்: சர்ச்சைக்குரிய 2.5 ஏக்க‍ர் நிலம் யாருக்கு சொந்தம்? அயோத்தியில் இராமர் பிறந்தது உண்மைதான். பாபர் மசூதி கமிட்டி, இந்து மகா சபை, இந்து நிர்மோகி அகாரா அமைப்பு ஆகியவற்றுக்கு சமமாக பிரித்துக்கொடுக்க‍ வேண்டும். விவரம்: அலகாபாத் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளதாக வக்கீல்கள் கூறினர். அயோத்தி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் இறுதித் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நீதிபதிகள் எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் இன்று மாலை 4 மணி அளவில் படிக்க ஆரம்பித்தனர் . தீர்ப்பை அடுத்து பா.ஜ., உயர்மட்டக்குழு அவசர கூட்டம் இன்று மாலை பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இல்லத்தில் நடக்கிறது. தீர்ப்பை அடுத்து எழுந்துள்ள நிலை குளித்து சன்னி முஸ்லிம் சட