Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Products

மே 21, இதே நாளில் . . .

1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக் கருகி ல் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.விடுதலை புலிகளின் கொடும் செயலுக்கு பலியானார்.... இவருடைய இலங் கை -இந்திய ஒப்பந்தம்....நிறைவேற்றப்பட்டு இருந்தால் ..... இன்று ஈழத் தமிழ் மக்கள் எந்தவித இழப்புமின்றி இறையாண்மை யோடு வாழ்வதோடு இணைக்கப்பட்ட வடகிழக்குப்பகுதி ஆசியா விலேயே மக்கள் வாழ ஆசைப்படும் முதல் இடமாகவும். ஆசியா விலேயே முதல்பணக்காரப் பகுதியாகவும் திகழ்ந்திருக்கும். அன்னாருக்கும் அவருடம் உயிர் நீத்த 14 உயிர்களுக்கும் நினை வஞ்சலி.... அந்த நிகழ்வை ஸ்ரீபெரும்புதூரில் அருகில் (more…)

மே 20, இதே நாளில் . . .

1894 - சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994) பிறந்த நாள் 526 - சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,00,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கோட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார். 1891 - தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார். 1983 - எயிட்ஸ் நோயை உண்டாக்கும் (more…)

விக்கிலீக்ஸ் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா அரசு

சில நாட்களுக்கு முன் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனம் வெளியிட்ட செய்திகள், சர்வதேச அளவில் ‌பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளதோடு, வெளிநாடுகளுக்கான அமெரிக்க தூதர்களை உளவு பார்க்க தூண்டியவர் ஹிலாரி என்பது விக்கிலீக்ஸ் இணையதளத்தின் புகார். ஆகவே ஹிலாரி தார்மீக பொறுப்பேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய‌ வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளது.ஆனால் ஜூலியான் பிரச்னையை திசை திருப்புவதாகவும், ஹிலாரி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றுகூறி அமெரிக்கா அரசாங்கம், விக்கிலீக்ஸ் இணையதளத்தின் கோரிக்கையை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. *** இதன்பின் வந்த புதிய செய்தி

விக்கிலீக்ஸ் இணையதளம் பகிரங்கமாக, ரகசிய ஆவணங்கள் வெளியிட்டது: அலறும் அமெரிக்கா;

அமெரிக்காவின் அந்தரங்க ரகசியங்களை கண்காணித்து இந்த நாட்டின் உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட விஷயங்கள் என்ன, என்ன என்பதை விலாவாரியா புட்டு, புட்டு வைத்திருக்கிறது. இது அமெரிக்காவின் பாதுகாப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் , தோழமை நாடுகளுடனான நட்புறவில் பிளவை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈராக் போர் தொடர்பான ஆவணங்களை இந்த விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி 2 லட்சத்து 51 ஆயிரத்து 287 ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில் அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் வெள்ளை மாளிகையுடன் என்ன, என்ன விவரம் தொடர்பு கொள்ளப்பட்டது. என்றும் சீனா, பிரிட்டன் ரஷ்யா , இந்தியா, ஆப்கன், ஈரான், ஈராக், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் தொடர்பான ஆவணங்கள் முக்கியமானது ஆகும்.

விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அம்பலம்

விக்கிலீக்ஸ் இணையதளம் தனது இணையதளத்தில் அம்பலப்படுத்திய தகவல், அமெரிக்க தூதரக வட்டாரத்தில் சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க தூதரகம் வைத்துள்ள பட்டப்பெயர்களின்  விபரம் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு ஆடைகள் இல்லாத பேரரசர் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு பட்டப்பெயர் வலிமையற்ற, செயல்திறனற்ற ஐரோப்பிய தலைவர். ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவுக்கு புடினின் கையாள்,     புடினுக்கு ஆல்பா டாக் ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாதுக்கு ஹிட்லர். வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் -இல் மனவலிமையற்ற வயதானவர் என்றே அமெரிக்க தூதரகத்தால் மேற்சொன்ன தலைவர்கள் அழைக்கப்படுகின்றனர். இதன் தொடர்புடைய புதிய செய்தி விக்கிலீக்ஸ் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா  

விக்கிலீக்ஸ் இணையதளம் பகிரங்க மிரட்டல்

விக்கிலீக்ஸ் இணையதளம், தனது இணையதளத்தில்  ஈராக்  மற்றும் ஆப்கன் போர்களில் அமெரிக்க ராணுவம் பல்வேறு தகவல்களை மூடி மறைத்து விட்டது.  விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் அந்த உண்மைத் தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ரஷ்யா, துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் முன்பைவிட தற்போது அதிக பைல்களை வைத்திருப்பதாகவும் அவற்றை வெளியிடப்போவதாகவும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.