
நடிகை திரிஷா ஏன் வரவில்லை? மேடையில் கொந்தளித்த தயாரிப்பாளர்
நடிகை திரிஷா ஏன் வரவில்லை? மேடையில் கொந்தளித்த தயாரிப்பாளர்
நடிகை திரிஷா, மருத்துவராக நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் “பரமபத விளையாட்டு”. இந்த படம் த்ரிஷாவுக்கு 60வது படம் ஆகும். பெண் மையப்படுத்திய சினிமாவான இதை திருஞானம் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்ட நிலையில் த்ரிஷா மட்டும் வரவில்லை.
நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் சிவா “பெரிய ஹீரோக்களை மையப் படுத்தி எடுக்கப்படும் படங்களில் ப்ரோமோஷன்களுக்கு நடிகைகள் தேவையில்லை. அந்த ஹீரோவை வைத்தே ப்ரொமோட் செய்து கொள்ளலாம். ஆனால் சின்ன பட்ஜெட் படங்கள், முக்கியமாக ஹீரோயினை மையப்படுத்திய படங்கள் எனும்போது அவர்கள் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்வில் த்ரிஷா கலந்து கொள்ள வில்லை