
தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
தூசி பட்டா - அது என்னங்க தூசி பட்டா
முதலில் பட்டா என்றால் என்ன என்பதை பார்ப்போம். பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும். கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும். இந்த பட்டா பல வகைப்படும். அதில் ஒன்றுதான் இந்த தூசி பட்டா ஆகும். இந்த தூசி பட்டா குறித்த தகவல்களை இங்கு காண்போம்.
கிராம கணக்கில் 2 ம் எண் புத்தகத்தில் “C” பதிவேட்டில் குறிப்பிட்டுக் கொடுக்கும் பட்டாதான் 2C பட்டா ஆகும். ஆனால் நாளடைவில் அது மருவி அது தூசி பட்டா என்று பெயர் பெற்றது.
அதாவது அரசு நிலத்தில் உள்ள புளியமரங்கள், பனை மரங்கள், பழ