Thursday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Rushia

இந்தியா – விண்வெளி போருக்கு தயார் – பிரதமர் அதிரடி – மிரண்ட உலக நாடுகள்

இந்தியா - விண்வெளி போருக்கு தயார் - பிரதமர் அதிரடி - மிரண்ட உலக நாடுகள் இந்தியா - விண்வெளி போருக்கு தயார் - பிரதமர் அதிரடி - மிரண்ட உலக நாடுகள் நாடாளுமன்றத் தேர்தல் 2019 ஜுரம் நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. சில (more…)

ரஷ்யாவில் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: 31 பேர் பலி

ரஷ்யாவின் தலைநகர் மாஸ் கோவில் உள்ள டோமொ தேடோவா விமான நிலை யில் இன்று பயங்கர குண்டு வெடித்தது. இதில் 31 பேர் உடல் சிதறி பலியா னார்கள். மேலும் 131 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுளனர். ரஷ்யாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த மிக மோசமான (more…)

ரஷ்யாவில் கிருஷ்ணன் கோயில்

ரஷ்யாவின் தலைநகரான‌ மாஸ்கோவில் கிருஷ்ணன் கோயில் ஒன்று விரைவிலேயே கட்டப்பட உள்ளது. இந்த கிருஷ்ணன் கோயில் இஸ்கான் அமைப்பு, இந்து அமைப்பு மற்றும் இந்திய அரசு உதவியோடு கட்டப்பட உள்ள இந்த கோவில் இந்தியாவில் உள்ள பழமையான கோயிலை போன்று கலை அம்சத்தோடும், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும் கட்டப்பட உள்ளதாகவும். கோயிலில் கட்டப்படும் வளாகத்தில் இந்திய மருத்துவமான ஆயுர்வேதம், சமுதாய நிகழ்ச்சிகள், பக்தர்கள் தங்குவதற்குரிய வசதிகள் மற்றும் அரங்கங்கள் போன்றவை கட்டப்பட உள்ளதாகவும். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள வெர்ஸ்கினோ கிராமத்தில் இந்த கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் வரும் 2012ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி துவங்க உள்ளதாக நாளேடுகளில் இன்று செய்தி வெளியாகியுள்ளது.

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் அசேஞ்சுக்கு, ரஷ்யா ஆதரவு

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியான் அசேஞ்சுக்கு ‌அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என ரஷ்யா பரிந்துரைத்துள்ளதை அடுத்து பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. சமீபத்தில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட பல்வேறு ரகசியங்களை பகிரங்கமாக வெளயிட்டது. இது அமெரிக்காவின் நிழல் உருவத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. அமெரிக்காவின் இந்த குட்டு வெளிப்பட்டதால், ஏக சந்தோஷத்தில் இருக்கிறது ரஷ்யா. அதன் வெளிப்பாடே அசேஞ்சுக்கு ஆதரவுதான். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக உலக நாடுகளுகளின் முன்வைக்க வேண்டும் சிபாரிசு செய்துள்ளது ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவ் அலுவலம் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன•  மேலும் ரஷ்யாவின் இந்த பரிந்துரை, அமெரிக்க அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை: கொரியாவுக்குள் நுழைந்தால் நடப்பதே வேறு

தென்கொரியா, தனது மக்களை போர்க் கேடயமாக பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ள வடகொரியா, "அமெரிக்காவின் "ஜார்ஜ் வாஷிங்டன்,' கொரியாவின் மஞ்சள் கடல் எல்லைக்குள் வந்தால் அதன்பின் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது' என்று, புதிய மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து விடுத்துவரும் எச்சரிக்கைகளால் தென்கொரிய மக்களிடையே மேலும் மேலும் கோபம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், தென்கொரியாவுக்கு சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் தென்கொரிய கடற்படைவீரர்கள் இருவர், 60 வயதுள்ள இரண்டு பேர் என நான்கு பேர் பலியாயினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று தென்கொரியத் தலைநகர் சியோல் அருகில் உள்ள சியோன்க்னம் நகரின் ராணுவ மருத்துவமனையில், பலியான இரு கடற்படை வீரர்களுக்கான இறுதியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்கொரிய பிரதமர் கிம் ஹ்வாங் சிக் உ

கோவா ஒருநாள் போ‌ட்டி மழையால் தாமதம்

இந்திய-ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையே கோவாவில் இன்று நடைபெறவு‌ள்ள 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தாமதமாகத் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்குத் துவங்க வேண்டிய இந்தப் போட்டி, நேற்று பெய்த பலத்த மழை காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு துவங்க முடியாத அளவிற்கு மைதானம் உள்ளதாக நடுவர்கள் கருதுகின்றனர். 11 மணிக்கு மீண்டும் ஒருமுறை மைதானத்தை ஆய்வு செய்துவிட்டு போட்டி துவக்கம் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 3வது ஒரு நாள் போட்டியும் ரத்து செய்யப்பட்டால், இந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றுவிடும். போட்டி நடந்து ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற்றால்தான் இத்தொடரை ஆஸ்ட்ரேலியாவால் சமன் செய்ய முடியும்

கோவாவில் மழை கொட்டுகிறது: மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கு சிக்கல்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மர்கோவாவில் நடக்க உள்ள 3 வது ஒரு நாள் போட்டி, மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. கொச்சியில் நடக்கவிருந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2 வது போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து முக்கியமான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மர்கோவாவில் நடக்க உள்ளது. கடும் மழை: ஆனால் இப்போட்டி திட்டமிட்ட படி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மர்கோவாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இது மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் கே.வி.சிங் கூறுகையில்,"" இந்த மாதம் மட்டும் 191.7 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கடந்த 15 நாட்களாக மழை பெய்து வரு