
சொத்து விற்றவர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா?
சொத்து விற்றவர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா?
சொத்து கிரையம் முடித்தவுடன் பட்டா பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பத்தின் அதனை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவேளை சொத்து வாங்கிய உடனேயே பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் செய்வதன் மூலம் இன்னொரு பிரச்சினையையும் சந்திக்க வேண்டிவரும்.
சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவர் இறந்து விட்டால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு தேவையில்லாத அலைச்சலையும், சிரமத்தையும் சந்திக்க வேண்டி வரும். இறந்தவருடைய இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் தேவைப்படும். அதற்கு நீங்கள் சொத்து விற்றவருடைய வாரிசுகளை நாடவேண்டி இருக்கும். அந்த சமயத்தில் வாரிசுகள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவித்தால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது மேலும் தாமதமாகக் கூடும்.
எனவே பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து அதை வாங்க