
ஆபத்திற்கு உதவாத கைபேசி? – ஓர் எச்சரிக்கை தகவல்
"ஆபத்திற்கு உதவாத கைபேசி அது எவ்வளவு விலை உயர்வாக இருந்தாலும் அது குப்பைதான்"
உறவுகளும் நட்புக்களும் இல்லாமல் இருங்கள் என்றாலும் நாம் இருப்போம் ஆனால் இந்த கைபேசி இல்லாமல் இருக்கச் சொன்னால் ஐயோ அது எப்படி முடியும் என்று பிரம்மாண்ட கேள்விக்குறியுடன் நம்மை ஆச்சரியமாக பார்ப்பார்கள்.
நம்முடைய பெரிய பெரிய வேலைகளையும்கூட இந்த கைபேசி நம்மிடம் இருந்தால் ஒரு நொடியில் முடித்து விடுகிறோம். அந்தளவுக்கு கைபேசி நம்மோடு பின்னி பினைந்து விட்டது.
சரி இந்த கைபேசியுடன் எப்போதும் அத்துடன் ஒரு துண்டுச் சீட்டில் ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் அத்தியாவசியம்.
உங்கள் கைபேசியை பாதுகாக்க போட்டுள்ள மேலுறையினுள், ஒரு துண்டுச்சீட்டில் உங்கள் அப்பா, தாய்மாமன், மனைவி, மகன், மகள், நெருங்கிய உறவினர், நெருங்கிய நண்பனி்ன் ஆகியவர்களில் இருவரது பெயர் மற்றும் தொடர்பு எண்ணை மற