Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Secretary

உதயநிதி ஸ்டாலின் –  இளைஞரணி செயலாளராக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் – இளைஞரணி செயலாளராக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் - இளைஞரணி செயலாளராக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு திமுக இளைஞரணி செயலாளராக பல ஆண்டுகளாக இருந்துவந்த மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவரான பிறகு அந்தப் பதவியை துறந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வெள்ளக் கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, உதயநிதிக்கு இளைஞரணி பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக முன்னணியினர் வைக்கத் தொடங்கினர். திருச்சி, நாமக்கல் மாவட்ட திமுகவினர் இது தொடர்பாக திமுக தலைமைக்கு தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பிவைத்தார்கள். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இளைஞர் அணிச் செயலாளராக இருந்த வெள்ளைக் க

"எனக்கு யாருமே விரோதிகள் கிடையாது!" – தன்னைப் பற்றி அவதூறு பரப்புவர்களுக்கு S.Ve.சேகரின் பதிலடி

"எனக்கு யாருமே விரோதிகள் கிடையாது!" - தன்னைப் பற்றி அவதூறு பரப்புவர்களுக்கு S.Ve.சேகரின் பதிலடி எனக்கு யாருமே விரோதிகள் கிடையாது! - தன்னைப் பற்றி அவதூறு பரப்புவர்களுக்கு S.Ve.சேகரின் பதிலடி இன்று காலையில் விதைவிருட்சம் சத்திய மூர்த்தி ஆகிய எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு திரு. எஸ்.வி. சேகர் அவர்களைப் பற்றிய ஒரு (more…)

பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் “ஸ்டிரைக்’ வாபஸ்”

"ஸ்பெக்ட்ரம் 3ஜி' ஒதுக்கீட்டுக்காக பெற்ற 18 ஆயிரத்து 500 கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும்; மொபைல் சேவைக்கு நவீன கருவிகள் வாங்கித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், கடந்த இரு தினங்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தொலைத் தொடர்பு பணிகள் அனைத்தும் சம்பித்து போய் இருந்தன• இந்நிலையில் பி.எஸ்.என்.எல்., சேர்மன் கோபால்தாஸ், தொலைத் தொடர்புத்துறை செயலர் சந்திரசேகர் உள்ளிட்டோர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தை வெற்றி பெற்று, சுமுக முடிவு எட்டப்பட்டதால், ஊழியர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் உறுதி அளித்தது. இதையடுத்து "ஸ்டிரைக்' வாபஸ் பெறப்பட்டு ஊழியர்கள் பணிக்குத் திரும்புவர் என்றும், பாதிக்கப்பட்ட பணிக