பாலியல் கல்வி இப்போது பல கல்வியாளர்களாலும பெற்றோர்களாலும் சூடாக விவாதம் செய்யப்படும் விஷயம். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், நமது சமூகம் ஆண் பெண்ணுடன் பேசுவதையோ பழகுவதையோ ஒரு பாவமான விஷயமாகக் கருதியது. ஆண் பெண்களுக்கென்று தனிப் பள்ளிகள், ஆசிரியர்கள் என்று இரு பிரிவினரையும் பிரித்தே வைத்திருந்தது. ஆனால் சமுதாயத்தில் கலாசார மாறுதல்களுக்கேற்ப ஆண் பெண் உறவுகளிலும் மிகப் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. கல்வி நிலையங்களிலும் அலுவலகங்களிலும் ஆண் பெண் சகஜமாக வேற்றுமையின்றிப் பழக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்கள், இன்டர்நெட்டின் வளர்ச்சி போன்றவையும் இரு பாலர்களுக்கிடையே ஒரு (more…)