குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உடல் உறுப்புகளை பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்தி, பிறர் அவர் களை தொட முயலும்போது அந்த தொடுதலை சரியாக அடையாள ம் கண்டு, அது தவறான தொடுதலாக இருக்கும்பட்சத்தில் அவர்க ளே அந்த காம பிசாசுகளை கண்டித்து, எதிராக போராடவும் சொல் லிக் கொடுக்க வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மறைமுகமாக அரங் கேறுவது அதிர்ச்சிகரமானது. சமூக த்தில் அதுபற்றிய விழிப்புணர்வு இல் லாமல் இருப்பது துக்ககரமானது. நான்கு பேரில் ஒரு சிறுமியும், ஆறு பேரில் ஒரு சிறுவனும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார் கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கி றது.
பாலியல் கொடுமைகளில் இருந்து உங்கள் குழந்தைகளை காக்கவும், இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நவம்பர் 19-ந்தேதி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை