Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Short Story

வ‌ரம் (சிறுகதை) – விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

 உரத்த சிந்தனையின் 29 ஆவது ஆண்டு விழாவின் போது, வெளி வந்த ஆண்டு மலரில் உங்கள் அன்பு நண்பன் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (நான்) எழுதிய "வரம்" என்ற சிறுகதை இடம் பெற்று உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த வரம் சிறுகதையை இங்கு பகிர்கிறேன். ஒரு ஊரில் ஒரு முனிவர் இருந்தார். அவர் வாய்பேச முடியாத மாற்று த்திறனாளி ஆவார். அவரது எளிமையான தோற்ற‍மும், அவர் அப் ப‍குதி மக்க‍ளிடம் பழகும் முறையாலும் கவரப்பட்ட‍ அப்பகுதி மக்க‍ள் இவரை அன்போடு தன் வீட்டு உறவாக எண்ணி அன்றாடம் வணங்கி வந்தனர். இந்த வாய் பேச முடியாத முனிவருக்கும் இவரது சிஷ்ய கோடிகளுக்கு தினமும் ஒரு வீடு என்றமுறை வைத்து இருந்து உணவு அளித்து உபசரித்து, அவரது ஆசியும் பெற்று வந்தனர். மேலும் வாய்பேச முடியாத அந்த முனிவர், தனக்கு வேண்டியதை அல்ல‍து விருப்பங்க ளை ஓர் ஓலைச்சுவடியில் (more…)

ஆதலினால் உலகத்தீரே காதல் செய்வீரே!

(சிறுகதை) முகுந்தன் அன்று வழக்கம்போல் அலுவலகம் முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தான். அவனின் நினைவுகளில் எப்போதும் குடிகொண் டிருப்பவள் கயல்விழி. இப்போதும் அவளை நினைத்துக்கொண்டே பேருந்தில் பயணித்துக் கொண்டிரு க்கிறான். சாலையோரம் ஏதோ கூட் டம். பேருந்தை விட்டு இறங்கி ஓடு கிறான். கூட்டத்தை விலக்கிக் கொ ண்டு என்னவெனப் பார்க்க முனை கிறான். விபத்தொன்று நடந்திருக்கி றது. அங்கு ஒரு இளம்பெண் இரத்த மொழுக மயங்கிக் கிடக்கிறாள். அருகில் சென்று உற்றுப்பார்க்கிறா ன் . அந்தப் பெண் வேறுயாருமல்ல கயல்விழி தான். அதிர்ச்சியடைந்தான் முகுந்தன். உடனே அவளை மருத்துவ மனைக் கு கொண்டு செல்கிறான் ‘இத்தனை (more…)

பொறுமை தாய்க்குத்தான் அதிகம்; தந்தைக்குக் குறைவுதான்

அக்பர் சக்கரவர்த்தி சபையில் வந்து, தமது சிம்மாசனத்தில் அமர்ந்தார். அமைச்சர், பிரதானிகள் யாவரும் சக்கரவர்த்தியை வணங்கி விட் டு அவரவர் இருக்கைகளில் அமர் ந்தனர். ஆனால், பீர்பால் மட்டும் வரவில் லை; அவருடைய ஆசனம் காலி யாக இருந்தது. அக்பரின் பார்வை அங்கே சென்றது. பீர்பால் காணப் படாமையால் அக்பருக்கு உற்சா கம் இல்லை. சிறிது நேரம் பொறு த்திருந்தார்: அப்பொழுதும் பீர் பால் வர வில்லை. ஒரு சேவகனை பீர்பால் இல்லத்துக்கு (more…)

புத்திசாலி தவளையும் முட்டாள் தவளையும்

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவு க்கு மழை. அந்த ஏரி நீர் குளி ர்ச்சி அடைந்து விட்டது. அந் தக் குளிரைத் தாங்க முடி யாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலு ள்ள ஒரு கிணற்றுக்கு வந் தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் (more…)

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற் பெயர் ரங்கராஜன். தனது தனிப் பட்ட கற்பனை மற்றும் நடை யால் அவர் பல வாச கர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக் கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறி வியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைக ளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. ஸ்ரீரங்கம் ஆண் கள் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை (more…)

“சிறுகதை” எழுதுவது எப்படி?

இந்த கேள்வியை யாராவது பெருசுகளிடம் கேட்டால், “சுஜாதா புக் எழுதியிருக்கிறார். வாங்கிப்படி!” என்கிறார்கள். உண்மையில் அந்தப் பெருசுகள் அப்புத்தகத்தை படித்திருக்க வாய்ப்பே யில்லை என்று கருதலாம். ‘சிறுகதை எழுதுவது எப்படி?' என்பதே ஒரு சிறுகதைதான். அந்த சிறுகதை அடங்கிய சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புக்கு சூட்டப்பட்ட பெயர் அது. ”சுஜாதா சிறுகதை எழுத சொல்லித் தருகிறார்!” என்று யாராவது சொன்னால் பரலோகத்தில் இருக்கும் சுஜாதாவே அதை மன்னிக்க மாட்டார். சிறுகதை எழுதுவதை பாடமாக எல்லாம் சொல்லித்தர முடியாது என்று நம்பியவர் அவர். ஆனால் ஒரு தேர்ந்த வாசகன் நிறைய சிறுகதைகள் வாசிப்பதின் மூலமாக சிறுகதைகளை எழுதும் ஆற்றலை பெற்றிட முடியும். குறிப்பாக சுஜாதாவின் சிறுகதைகளை நிறைய வாசிக்கலாம். (more…)

என்ன பிறப்பு இது?

இரை தேடச்சென்ற இடத்தில் தற்செயலாக இரு ஓணான்கள் சந்தித்துக் கொண்டன.இரண்டும் உலக விஷயங்கள் குறித்தும், தங்களுடைய வாழ்க்கை பற்றியும் பேசிக் கொண்டிருந்தன. "என்ன பிறப்பு இது? ஏதோ சாப்பிடுகிறோம்,சுற்றுகிறோம், தூங்குகிறோம். இதெல்லாம் ஒரு வாழ்வா? நமக்கென்று ஒரு பெயர் உண்டா? மரியாதை உண்டா? இல்லை நம்மைப்பற்றி யாராவது பெருமையாகப் பேசுகிறார்களா? ஒன்றுமே கிடையாது. புள்ளிமானாகப் பிறந்திருந்தாலாவது ராஜாவின் தோட்டத்தில் சுற்றித் திரியலாம். நம்மை நன்கு கவனித்துக் கொள்வார்கள். வேளாவேளைக்கு உணவு கிடைக்கும். இப்படி காடு முழுக்க சுற்றித்திரிய வேண்டிய அவசியமில்லை'' என அலுத்துக் கொண்டது ஒரு ஓணான். இப்படி அது பேசிக்கொண்டிருக்கும்போதே, இரண்டு வேட்டை நாய்கள் ஒரு புள்ளிமானை துரத்திக் கொண்டு வந்தன. உயிர் பிழைக்கும் ஆசையில் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது புள்ளிமான். இருந்தாலும் வேட்டை நாய்கள் அதைப் பிடித

சிறுகதை: ‘பால்’ திரிந்த வேளை!

“சும்மாவா சொன்னாங்க ஆண அடிச்சு வளர்க்கணும்; பொண்ண புடிச்சு வளர்க்கணும்னு, ஒரு குடும்பம் நடத்துற பயலா இவன்? மணி ஆறாகுது.. இன்னும் தூங்கிட்டு கெடக்கான்…” மாமியார் மரகதம்மாள் குரல் ஊடுருவ திடுக்கிட்டு எழுந்தான் மூர்த்தி. அய்யய்யோ இவன வேற ஸ்கூலுக்கு கௌப்பணும்.. சாப்பாடு வேற கட்டணும்.. தலைவலின்னு நேத்து போட்ட மாத்திரை ஆளையே அசத்திடுச்சு… மனதில் பதட்டத்தின் ரேகைகள் கூட “டேய் எழுந்திரு, எழுந்திரு” மகன் ராகுலை எழுப்ப கண்களை திறக்காமலே எழுந்தவன், அந்த இடத்திலே ஒண்ணுக்கு போக டவுசரைத் தூக்க.. “டேய்.. டேய்.. மாடு கண்ணத் தொறயேன்.. ” என்று கத்தியபடி.. பாத்ரூமுக்குள் அவனைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்தினான். மனைவி முகத்தைப் பார்த்தே சரியில்லை என்று புரிந்து கொண்ட மூர்த்தி அவசர அவசரமாக கேஸ் அடுப்பைப் பற்றவைத்து பால் பாத்திரத்தை வைத்தான். ஆமாம்.. இவன் டீயப் போடுறதுக்குள்ள.. நான் ஆபீசுக்க
This is default text for notification bar
This is default text for notification bar