Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sidha Maruthuvam

‘பெண்களுக்கு ஆலர்ஜியா? ஆஸ்துமாவா?

‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை மட் டும் சொல்லிவிட முடியாது. இருப்பினும் முடிந்தவரை அலர்ஜி ஏற்படாமல் தவிர் த்து விடுவது நல்லது!’’ என்கிறார் பிரபல ஆஸ் துமா நோய் நிபுணர் டாக்டர் ஆர். நரசிம்மன். ‘‘நல்லவேளையாக ஆண்களோடு ஒப்பிட் டால் பெண்களுக்கு ஆஸ்துமா வருவது குறைவுதான். இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில்தான் ஆஸ்துமா வருகிறதாம்.’’ ‘‘ஆஸ்துமா எந்த வயதினருக்கும் வர லாம். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலே யே முடங்கிக் கிடந்தார்கள். வெயிலும், தூசுயும் அதிகமில்லாத சூழல்... ஆனால் இப்போது அப்படி இல்லை யே!... பெண்கள், வெளியே எல்லா வேலைகளுக்கும் போகிறார்க ள். ஆண்களின் (more…)

பழங்களும் பயன்களும்

1. மலச்சிக்கலைப் போக்கும் *நறுவிலிப் பழம்* நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும். 2. தாகம் தணிக்கும் *ஆல்பகோடாப் பழம்* காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும். 3. இளமை தரும் *தக்காளி* இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும். 4. பேதியை நிறுத்தும் *எலுமிச்சம்பழம்* எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்று விடும், 5. இன்பம் தரும் *இனிப்புக் கமலா* இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத் தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும். 6. விக்கலை நிறுத்து

அரளிச்செடி

எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும். இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும். வறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும