Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sri Lanka Army

குருப் பெயர்ச்சி ஆலங்குடியில் . . .

குருப்பெயர்ச்சியான நேற்று, ஆலங்குடி குருபகவான் கோவிலில், ஏராளமான பக் தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திரு வாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில், ஆபத்சகாயேஸ் வரர் கோவில் உள்ளது. நவக் கிரகங்களில் ஒன் றான குருபகவானுக்கென்று தனி சன் னிதி கொண்டு சிறந்து விளங்கும் இக் கோவி லில், நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது.நேற்று நள்ளி ரவு 1.10 மணிக்கு குருபகவான், மீன ராசி யில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். இதற்காக, கடந்த 29ம் தேதி முதல், முத ல் கட்ட லட்சார்ச்சனை துவங்கி, ஆறாம் தேதி நிறைவு பெற்றது. பரிகாரம் செய்ய வேண்டிய மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விரு ச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசி களைச் சேர்ந்த பல ஆயிர க்கணக்கானோர் பங்கேற்று குருபக வானை தரிசித்தனர். நேற்று காலை 10 மணிக்கு மேல் தங்க கவசத்தில், விபூதி அலங் காரத் தில் குருபகவான் காட்சியளித் தார். இரவு ஒரு மணிக்கு மேல், சிறப்பு பூஜைகள

முன் மாதிரி முதல்வர்கள்

2011 ஜனவரி மாத உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் தேர்வு ஜுரம் நெருங்குவது போல... நம் அரசியல்வாதிகளுக்கு இப்பொழுதே தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுவிட்டது. தேறு வோமா? என்ற பயத்தில் பிதற்றுகிற மாணவர்களைப் போல அரசியல் தலைவர்களும் ஏதேதோ பிதற்ற ஆரம்பித் திருக்கிறார்கள். தேர்வில் வெற்றி பெறுவதற்கு உழைப்பும், முனைப்பும், படிப்பும், போதும், ஆனால் தேர்தலில் வெற்றி பெற... அதிலும் நம்ம ஊர் தேர்தலில் வெற்றி பெற . . . மக்களை மயக்கத்திலாழ்த்தும் மதுவும், ... சோம்பேறிகளாக்கும் இலவசங்களும், வாக்களிப் பதற்கு இலஞ்சமும், ஜாதி உணர்வும், கொள்கையற்ற கூட்டணியும் இருந்தால் போதும். இவையெல்லாம் இருந்தும்கூட, இன்று பல அரசியல் தலைவர்கள், தேர்தலில் தேறிவர, தலைகீழாகத் தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் மேலே சொன்ன எந்த ஜாலங்களுமின்றி சில மாநிலங்களில் . . . சில முதல்வர்கள் தொடர்ந்து (more…)

தி.மு.க.,வுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் தொடர் ரெய்டு: 34 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை

ஸ்பெக்ட்ரம் "2ஜி' விவகாரத்தில், சி.பி.ஐ., இரண்டாவது கட்டமாக மீண்டும் நேற்று டில்லி மற்றும் தமிழகத்தில் 34 இடங்களில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. டில்லியில் நிரா ராடியா, ஹவாலா ஊழலில் தொடர்புடைய ஏஜென்டுகளின் அலுவலகங்கள் உட்பட 7 இடங்களிலும், தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது குடும்ப நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள், "நக்கீரன்' இணை ஆசிரியர் காமராஜ், "தமிழ் மையம்' அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பரின் அலுவலகம் என 27 தி.மு.க.,வுக்கு மிகவும்   (more…)

ராசாத்தி அம்மாள் ஆடிட்டர் வீட்டில் ரெய்டு; நிருபர்- அதிகாரி வீட்டில் புகுந்தது சி.பி.ஐ.,

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக  முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர் வீடு மற்றும் நிருபர்‌கள், அதிகாரிகள் என பல முக்கியப்புள்ளிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். கார்ப்பரேட் தரகர் நிரா ராடியாவின் டில்லி வீட்டிலும் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு மேற் கொண்டுள்ளது. டில்லி பாரகம்பா சாலையில் இருக்கும் நிராவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் அலுவலகம், டில்லி சத்தர்பூர் பகுதியில் இருக்கும் அவரது வீடு உள்ளிட்ட டில்லியில் மொத்தம் 7 இடங்களில் ரெய்டு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தமிழகத்தில் 27 இடங்கள் : தமிழகத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 27 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. டில்லியில் இருந்து வந்‌த சி.பி.ஐ., அதிகாரிகள் 150 பேர் கொண்‌ட குழு பிரிந்து ரெய்டு நடந்து வருகிறது. வாரப்பத்திரிகை ஒன்றின் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டிலும் , நுங்கம்பாக்கம்

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: தமிழ்நாட்டில் 27 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை; டெல்லியில் நீரா ராடியா வீடு-அலுவலகத்தில் வேட்டை

“2-ஜி ஸ்பெக்ட்ரம்” ஒதுக்கீட்டில் ரூ.1 லட் சத்து 75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய பொது கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறி இருந்தது.  இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை மற்றும் பல்வேறு விசாரணை குழுக்கள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. “ஸ்பெக்ட்ரம்” விவகாரத்தில் முக்கிய ஆதாரமாக தொழில் ஆலோசகர் நீரா ராடியாவின் டெலிபோன் பேச்சு டேப் கிடைத்தது. நீரா ராடியாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சி.பி.ஐ. மற்றும் வருமான வரி அதிகாரிகள் 3 ஆண்டுகளாக அவரது டெலிபோன் பேச்சை பதிவு செய்து வந்தனர். அதில் அவர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்தது. தொழில் அதிபர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்று கொடுப்பதற்காக சம்பந்தப்பட்ட சிலரிடம் அவர் டெலிபோனில் பேசிய விபரங்கள் அனைத்தும் பதிவாகி இருந்தன. இதன் அடிப்படையில் சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்

சாதிகள் -அர்த்தமுள்ள இந்துமதம்- கவியரசு கண்ணதாசன்)

இந்து சமய வரலாற்றின் மிக ஆரம்பக் காலத்தில் இந்து சமூகமானது பல நிலைகளாகப் பகுக்கப்பட்டு அமைந்திருந்ததையே விளக்கும் வகையில், சாதி முறையானது அமைந்திருந்தது. பழங்குடி மக்கள் என்ற அடிப்படையிலும், செய்தொழில் அடிப்படையிலும், சாதி முறையானது அமைந்ததில் ஏற்பட்ட குழப்பமானது கண்டிப்பான நியதிகளில் ஒன்றாகப் பழங்குடி மக்களுடைய பழக்க வழக்கங்கள் பிரத்தியேகமாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணமாயுள்ளது. சாதிமுறை அமைப்பினுடைய சமூக அம்சத்தைப் பார்க்கும் பொழுது அந்த அமைப்பானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதே தவிர, அது தெய்வீக அமைப்பின் மர்மமாக அமைந்து விடவில்லை. மக்களிடையே காணப்பட்ட உண்மையான வேற்றுமைகளுக்கு ஏற்பவும், (more…)

சென்னை மாநகராட்சிக்கு ஸ்காச் விருது

சென்னை மாநகராட்சி சார்பில் பொது மக்களின் குறைகளை தொலைபேசி மூலம் தீர்வு காண்பதற்கு 1913 என்ற தொலைபேசி எண்ணும், எஸ்.எம்.எஸ். மூலம் தீர்வு காண 9789951111 என்ற கைபேசி எண்ணும் நடைமுறையில் உள்ளன• http://www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சி இணைய தளச்சேவைகள் மூலமும் பொது மக்களின் குறைகள் சிறப்பான முறையில் தீர்க்கப்படுகின்றன• குப்பைகளை அகற்றுதல், நாய்களைப் பிடித்தல், கட்டிட இடிபாடுகளை அகற்றுதல், சொத்துவரி செலுத்துதல், பிறப்பு - இறப்பு சான்றிதழ்களைப் பெறுதல், சாலைப் பராமரிப்பு மேற்கண்ட சிறப்பானப் பணிகளுக்காக ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஸ்காட்ச் நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு ஸ்காட்ச் விருது வழங்கிசிறப்பித்துள்ளது. த‌கவல் -  உரத்த சிந்தனை

1,76,00,00,00,00,000/-

(2010 டிசம்பர் மாத உரத்த‍ சிந்தனை இதழில் வெளியான தலையங்கம்) Rs.1,76,00,00,00,00,000/- - நாறிப்போச்சு நாடு! படித்து முடித்துவிட்டீர்களா? மூச்சு திணறுகிறதா? இத்தனைக்கோடி ரூபாய் (1.76 இலட்சம்) ஊழலால் உலக அரங்கில் மெகா ஊழலின் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது புண்ணிய பூமி பாரதம்! காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் அமைச்சர் மீது ஊழல் புகார். . . கார்கில் தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் திட்டத்தில் ஒரு மாநில முதல்வரே முறைகேடாக நடந்துகொண்டதாக புகார் . .  தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஒருவர் தனது பதவிக்காக ரூபாய் 600 கோடி ஒரு குடும்பத்திடம் பேரம் பேசியிருப்பதாக தகவல்கள் . . . . (இது இந்தாண்டில் மட்டும்)இப்படிப்பட்டத் தகவல்களால் நம் இந்திய தேசத்தின் முகம் அவமானப்பட்டுத் தலைகுனிந்திருக்கிறது. ஊழல் புகாருக்கு ஆளான இரண்டு மந்திரிகளை உடனே பதவி நீக்கி, தன்னைப் பரி

வீடியோ: இசைப்பிரியாவின் உடல் அடையாளம் காணப்பட்டது

இலங்கை ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப் பிரியாவின் உடலைக் காட்டும் புதிய விடியோவை சேனல்-4 வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலி களுடனான போரின் போது இலங்கை ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் தொடர்பான புதிய விடியோ சேனல்-4 தொலைக்காட்சியில் அண்மையில் வெளியானது. பின்புறமாகக் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சில ஆண்களை ராணுவ வீரர்கள் சுற்றி நின்று சுட்டுக் கொல்வது போன்ற காட்சியும், நிர்வாண நிலையில் சில பெண்களின் உடல்கள் கிடப்பது போன்ற காட்சியும் அந்த விடியோவில் இடம் பெற்றிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழ்நெட் இணையதளத்தின் வன்னிப் பகுதி செய்தியாளராகப் பணியாற்றிய ஷோபா என்ற இசைப் பிரியாவின் (27) உடலும் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் அந்த விடியோவில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் புதிய விடியோ ஒன்றை சேனல் 4 வெளியிட்டது. அதில் இசை

ஒர் இணையதளத்தை எத்தனை பேர், எந்த செய்தியை பார்த்தார்கள் என்பதை எப்படி தெரிந்துகொள்வது

முதலில் Google.com  செல்லுங்கள். இதன் மேல் பக்கத்தில்  more    என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள். பின்னர் இதனை அடுத்து even moreஎன்பதில் கிளிக்கிடுங்கள். கிடைக்கும் அடுத்த பக்கத்தில், அப்படியே மவுஸின் சக்கரத்தினை உருட்டிச் சென்று Trends என்று இருக்குமிடம் சென்று நிறுத்துங்கள்.  இதன் மீது கிளிக் செய்திடுங்கள். இங்குதான் மேலே முதல் பத்தியில் நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும். இங்குதான், பன்னாட்டு மக்களும் எந்த செய்தி அல்லது தகவலுக்காக, கூகுள் தேடுதல் தளத்தினை நாடி உள்ளனர் என்று காட்டப்படும். இங்கு காட்டப்படும் தேடுதல் பட்டியலில் நீங்கள் எதிர்பார்த்த தேடுதல் விஷயம் இல்லை என்றால், உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம். கவலைப்பட வேண்டாம். நீங்கள் எதனை எதிர் பார்க்கிறீர்களோ, அதனை தேடுதல் சொற்களாக அமைத்து,  தேடுதல் கட்டத்திலேயே “Search Trends” என டைப்செய்து, என்டர் தட்டினால், உடன் ஒரு

பிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி

நான் எதையும் தேடிப் போறதில்லை:வருவதை விருப்பமா செய்வேன் என்று நடன கலைஞர், நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்திருக்கும் பிரபுதேவா கூறினார். ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடி நடிக்கும் எங்கேயும் காதல் படத்தின் சூட்டிங்கை பிரான்சில் நடத்தி முடித்து சென்னை திரும்பிய கையோடு பிரபுதேவா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என் வாழ்க்கையில் பல விஷயங்கள், பல படிகள் விபத்தா நடந்திருக்கு. நடக்குது. நான் டைரக்டர் ஆனதுகூட அப்படித்தான். நானா அடுத்தது இதுத‌ான்னு திட்டமிடுறது இல்லை. என் பாதை, பயணம் எல்லாமே என் தனிப்பட்ட விருப்பம்னு இல்லாமல் காலம்  முடிவு செய்து அழைச்சிட்டு போகிற படிதான் இருக்குது. அப்படி கொண்டு போய் விடுகிற பாதை எனக்கு புடிச்சிருக்கு. களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்தபோது ஒரு நடிகனாக அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்தேன். தங்கர் ரொம்ப கோபக்காரர் என்று பலரும

கற்றது கையளவு: அவ்வையார்

நாம் கற்ற விஷயங்கள் வெறும் கைப்பிடி மட்டுமே. இன்னும் கற்கவேண்டிய விஷயங்கள் இந்த பரந்த பூமியைப் போல எவ்வளவோ இருக்கின்றன. அதனால் படித்து விட்டோம் என்ற இறுமாப்பு கூடவே கூடாது. * உள்ளத்தை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி அவற்றை அடிமையாக்குவதே வீரம். அழியாத கல்வியே நிலையான செல்வம். பிறருக்கு அடிமையாகாமல் சுயமாக சம்பாதித்து உண்பதே உயர்ந்தது. * முறையான பயிற்சியினால் சித்திரம் வரையப் பழகலாம். நாவின் பயிற்சியால் செந்தமிழில் பேச முடியும். மனப் பயிற்சியால் கல்வியில் தேர்ச்சிபெறலாம். ஆனால், நண்பர்களிடம் உண்மையான நட்புடன் பழகுதல், உயிர் இரக்கம் காட்டுதல், இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்தல் ஆகிய நற்குணங்கள் ஒருவனுக்கு பிறவியிலேயே அமையவேண்டும். * அறம் என்பது இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதலாகும். பொருள் என்பது நேர்மையான முறையில் நியாயமாக சம்பாதிப்பதாகும். இன்பம் என்பது உண்மை அன்பில் கருத்தொருமித்து தம்பதி
This is default text for notification bar
This is default text for notification bar