Saturday, April 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sri Lanka

விக்கிலீகீஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது

விக்கிலீகீஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது செய்யப்பட்டார். எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்பது மிகுந்த இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக விக்கிலீக்ஸ் இணையதள தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் தலைவரை அமெரிக்கா கைது செய்தாலும் அமெரிக்கா பற்றிய ரகசியங்களை தொடர்ந்து வெளியிடுவோம் – விக்கிலீக்ஸ்

க‌டந்த சில நாட்களாகவே விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தில் வெளிவந்த அமெரிக்கா அரசின் ரகசியங்கள் மற்றும் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய உண்மை விவரங்கள் மற்றும் பல வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் பல நாட்டு தலைவர்களை பற்றிய பரிபாஷைகளையும் வெளியிட்டு அமெரிக்காவை அலற வைத்தது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதன் காரணமாக அமெரிக்கா விக்கிலீக்ஸ் தலைவரை கைது செய்ய முயற்சித்து வருவதுடன் விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்கியது. இந்நிலையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒருவேளை விக்கிலீக்ஸ் தலைவரை அமெரிக்கா கைது செய்தாலும் அமெரிக்கா பற்றிய ரகசியங்களை தொடர்ந்து வெளியிடுவோம் என்று விக்கிலீக்ஸ் இணையதளம் உறுதியாக தெரிவித்துள்ளது. இது மேலும் அமெரிக்காவை சங்கடத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

கற்றது கையளவு: அவ்வையார்

நாம் கற்ற விஷயங்கள் வெறும் கைப்பிடி மட்டுமே. இன்னும் கற்கவேண்டிய விஷயங்கள் இந்த பரந்த பூமியைப் போல எவ்வளவோ இருக்கின்றன. அதனால் படித்து விட்டோம் என்ற இறுமாப்பு கூடவே கூடாது. * உள்ளத்தை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி அவற்றை அடிமையாக்குவதே வீரம். அழியாத கல்வியே நிலையான செல்வம். பிறருக்கு அடிமையாகாமல் சுயமாக சம்பாதித்து உண்பதே உயர்ந்தது. * முறையான பயிற்சியினால் சித்திரம் வரையப் பழகலாம். நாவின் பயிற்சியால் செந்தமிழில் பேச முடியும். மனப் பயிற்சியால் கல்வியில் தேர்ச்சிபெறலாம். ஆனால், நண்பர்களிடம் உண்மையான நட்புடன் பழகுதல், உயிர் இரக்கம் காட்டுதல், இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்தல் ஆகிய நற்குணங்கள் ஒருவனுக்கு பிறவியிலேயே அமையவேண்டும். * அறம் என்பது இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதலாகும். பொருள் என்பது நேர்மையான முறையில் நியாயமாக சம்பாதிப்பதாகும். இன்பம் என்பது உண்மை அன்பில் கருத்தொருமித்து தம்பதி

நடிகை புவனேஸ்வரி மீண்டும் . . .

சின்னத்திரை நடிகை புவனேஸ்வரி பாவத்தின் சம்பளம் என்ற புதிய தொடரில் நடிக்கிறார். தமிழ் சீரியல்களில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த புவனேஸ்வரி, தெலுங்கு சீரியல்கள் மற்றும் சினிமாக்களிலும் கொடிகட்டி பறந்தார். விபசார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி, அதன் பிறகு சின்னத் திரையில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இடையில் அரசியல் அழைக்க, அதில் கவனம் செலுத்தியதால் நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. இப்போது இந்த இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் `பாவத்தின் சம்பளம் என்ற தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார் புவனேஸ்வரி. வசந்த் டிவியில் கிறிஸ்துமஸ் தினத்தில் ஒளிபரப்பாக விருக்கும் இந்த தொடரில் அவருடன் சேசு, யுவான் சுவாங், ஜெயதேவி, சத்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். எப்போதோ நடந்த ஒரு சம்பவத்துக்காக ஒரு அப்பாவி இளம்பெண் மீது சாக்கடையை அள்ளி வீசுகிறது சமுதாயம். தன் மீதான சமூகத்தின் தவறான பார்வையை

மோடியை கொல்ல லஷ்கர் திட்டம் ;தமிழகம் – கேரளாவில் கால் ஊன்றவும் பிளான் போட்டனர்

சமீப காலமாக விக்கிலீக் இணைய தளம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்களது தலைமை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய மற்றும் ஆவணங்கள் மூலம் அனுப்பி தகவல்கள் பகிர்ந்து கொண்ட ஏறக்குறைய 2 லட்சத்திற்கும் அதிகமான டாக்மென்ட்கள் வெளியே லீக் செய்யப்பட்டுள்ளது. விக்கி லீக் வெளியிட்டுள்ள தகவல்கள் அமெரிக்காவுக்கு பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் தகவல்கள் அமெரிக்காவுக்கு சென்ற விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் தற்போது குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை கொல்ல லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்ட சதி விவரம் அமெரிக்க தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு அனுப்பிய விவரம் வெளி வந்திருக்கிறது. இதில் மோடியை கார் மூலம் குண்டு வைத்து கொல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த விவரம் இந்திய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்ப

லாரி அதிபர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு: வழக்கம் போல் லாரிகள் ஓடும்

லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக டில்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (லாரி உரிமையாளர்கள் சங்கம்) நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இன்று துவங்குவதாக இருந்த நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி மையங்களில் சீரான சுங்க வரி வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்த சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.லாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு, தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி புக்கிங் ஏஜன்டுகள் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதனால், தென் மாநிங்கள் முழுவதும் காஸ், மருந்து உள்ளிட்ட அத்தியாவச

அவமானப்பட்டும் அவமானப்படுத்தும் ஆர்யா

ஜீவா இரட்டை வேடங்களில் நடிக்கும் சிங்கம்புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. சினிமா வி.ஐ.பி.கள் கலந்து கொண்ட இவ் விழாவில் ஜீவாவின் நண்பர் எனும் முறையில் கலந்து கொண்டனர் ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள். அதில் ஆர்யா மட்டும் வாயில் சூயிங்கத்தை போட்டு மென்ற படி ஆஃப் டிரவுசருடன் அநாகரீகமாக மேடை ஏறியது மேடையில் இருந்த வி.ஐ.பி.களுக்கு மட்டுமல்ல அந்த திரையரங்கில் குழுமியிருந்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது. பால்கனியில் இருந்த ஒரு ரசிகர் ஏன் ஆர்யா உங்களுக்கு முழு பேண்ட் கிடைக்கலியா? என்று கேட்டே விட்டார்.அதற்கு மேடையில் பேசும் போது பதில் அளித்த ஆர்யா துபாய் நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கேற்று விட்டு நான், ஜீவா, ஜெயம் ரவி எல்லோரும்  விமானத்தில் இருந்து அப்படியே வந்து விட்டோம அது தான் ஆஃப்டிரவுசர் என்று சமாளித்தார். அதே விமானத்தில் வந்த ஜெயம்ரவி ஜீவா உள்ளிட்டவர

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு & மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை

எஸ்.எஸ்.எல்.சி.,பொதுத்தேர்வு அட்டவணை 28.03.2011 மொழி முதல் தாள் 29.03.2011 மொழி இரண்டாம் தாள் 31.03.2011 ஆங்கிலம் முதல் தாள் 01.04.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள் 05.04.2011 கணிதம் 08.04.2011 அறிவியல் 11.04.2011 சமூக அறிவியல் *** 10 ஆம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை 22.03.2011 மொழி முதல் தாள் 23.03.2011 மொழி இரண்டாம் தாள் 24.03.2011 ஆங்கிலம் முதல் தாள் 25.03.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள் 28.03.2011 கணிதம் முதல் தாள் 30.03.2011 கணிதம் இரண்டாம் தாள் 01.04.2011 அறிவியல் முதல் தாள் 05.04.2011 அறிவியல் இரண்டாம் தாள் 08.04.2011 வரலாறு மற்றும் சிவிக்ஸ் 11.04.2011 புவியியல் மற்றும் பொருளியல் *** இதன் தொடர்புடையது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் *** இன்றைய இடுகைகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவனை சி.பி.ஐ-ன் இணையத்தை

பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவனை

02.03.2011 மொழி முதல் தாள் 03.03.2011 மொழி இரண்டாம் தாள் 07.03.2011 ஆங்கிலம் முதல் தாள் 08.03.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள் 11.03.2011 இயற்பியல், பொருளியல், உளவியல் 14.03.2011 வேதியியல், கணக்குப்பதிவியல் 17.03.2011 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி 18.03.2011 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ் 21.03.2011 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் 23.03.2011 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி 25.03.2011 அரசியல் அறிவியல், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி *** இதன் தொடர்புடையது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் *** இன்றைய இடுகைகள் சி.பி.ஐ-ன் இணையத்தை நாசம் செய்த பாகிஸ்தான் சிபிஐ-ன் இணையத்தை, பாகிஸ்தான் நாசப்படுத்திய செய்தி – வீடியோ பேச்சு வார்த்தை தோல்வி: லாரி வேலை நிறுத்தம் உறுதி  

பேச்சு வார்த்தை தோல்வி: லாரி வேலை நிறுத்தம் உறுதி

லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக நேற்று டில்லியில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சருடன், ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், திட்டமிட்டபடி நாளை நாடு முழுவதும் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கும்,'' என, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி தெரிவித்தார். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையங்களில் சீரான சுங்க வரி வசூலிக்க வேண்டும். காலியாகச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு 25 சதவீதம் மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், நாளை நள்ளிரவு முதல் நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பா

சவாலான கதாபாத்திரங்கள்செய்ய வேண்டும்!

சன்டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடர்களில் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த தொடர் "மெட்டி ஒலி. தற்போது மறு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இத் தொடரில் அப்பாவியாக வந்து, ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளிய உமாவை ஒரு திரைவிழாவில் சந்தித்தோம். தற்போது சின்னதிரையில் உங்களைப் பார்க்க முடியவில்லையே என்றதும் மென்மையான குரலில் நிதானமாக பதிலளித்தார். உங்களைப் பற்றி? எனக்கு சொந்த ஊர் கடலூர். பிறந்தது,வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறேன். தற்சமயம் அப்பாவோட பிசினஸ் பார்த்து வருகிறேன். இதைதவிர கேப்டன் டிவியில் ஒரு தொடருக்காகப் பேசி வருகிறேன். ஒப்புதல் வந்த பிறகு அடுத்து என்ன தொடர் என்ற விவரங்கள் தெரியும். மற்றபடி "மெட்டி ஒலி' தொடரும், "மஞ்சள் மகிமை' தொடரும் மறுஒளி பரப்பு செய்யப்பட்டு வருகிறது. வேறு தொடர் எதுவும் தற்போதைக்கு இல்லை. ஒரு சில சினிமா நிகழ்ச்சிகளைத் தொகு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்காக நமது விதை2விருட்சம் இணையம் மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டிருக்கிறது. தாங்கள் கண்டு தங்களுடைய நன்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உங்களுக்கு வேண்டியவற்றை கிளிக் செய்து பயன்பெறுங்கள் கணக்கு பதிவியல் (அக்கொண்டன்சி - Accountancy) மாதிரி வினாத்தாள் உயிரியியல் தாவரவியல், (பயோ பாட்டனி - Bio - Botany) மாதிரி வினாத்தாள் வேதியியல் (கெமிஸ்ட்ரி - Chemistry) மாதிரி வினாத்தாள் ஆங்கிலம் - 1 (இங்கிலிஷ் -  English) மாதிரி வினாத்தாள் ஆங்கிலம் (இங்கிலிஷ் - English) - 2 மாதிரி வினாத்தாள் வணிக கணிதம் (மேக்தமேட்டிக்ஸ் - Mathematics ) மாதிரி வினாத்தாள் தாவரவியல் (பாட்டனி - Botany ) மாதிரி வினாத்தாள் உயிரியல் (விலங்கியல் - Zoology ) மாதிரி வினாத்தாள் Communicating English மாதிரி வினாத்தாள் வேதியியல