
மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்
மயிரிழையில் தப்பித்த கமல் - முட்டை கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் - களேபரம்
கமல் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கமல் மீது பி.ஜே.பியைச் சேர்ந்த மூன்று பேர் அழுகிய முட்டை மற்றும் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஆவேசமடைந்த மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த தொண்டர்கள், முட்டைவீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவரைப் பிடித்து நையப்புடைத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அரவக்குறிச்சியில் இஸ்லாமியர் நிறைந்த பகுதியில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தாம் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே" என்று பேசினார். கமலின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,கமலின் நாக்கை வெட்டணும்' என்று பேட்டி கொடுத்தார்.