
CAA-க்கு எதிராக ஐநா போர்கொடி – உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஐநா போர்கொடி - உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்தியில் ஆளும் பா.ஜ•க• அரசு, சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆவேச எதிருப்புக் களுக்கிடையே, தனக்கே உரிய மிருக பலத்துடன் நாடாளு மன்றத்தில் தாக்கல் அது வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர். சி., (CAA, NPR, NRC) போன்றவற்றிற்கு எதிராக ஆங்காங்கே இஸ்லாமியர்களும் இந்துக்க ளும் இந்தியர்களாக ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இருந்த போதிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் மேற்சொன்ன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்க