
இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்
இனி இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - ப.சிதம்பரம்
ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதி மன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியில் வந்தார். நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன்மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனைகளுடன் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந் நிலையில், ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் முதல் முறையாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-
பொருளாதார விவகாரங்களில் பாஜக தவறு செய்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசாமல் பிரதமர்