Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Thanthai

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள்

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள்

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் என போற்றப்படுபவர் ஈரோட்டை சேர்நத ஈ.வே. ராமசாமி அவர்கள். இவர் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி,ஈரோட்டில் திரு. வெங்கடப்பா நாயுடு மற்றும் சின்ன தாயம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம் ஆகும். பெரியார் அவர்கள், செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தாலும் தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண் கல்வி, கடவுள் மறுப்பு உள்ளிட்டவற்றுக்காக தமிழகத்தில் மிகப்பெரிய குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். அவரது 141வது பிறந்தநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் புரட்சிகளை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.இன்று தமிழகத்தில் ஜாதிப் பெயரை யாரும் சேர்த்துக்கொள்ளாமல் விட்டதற்கு காரணம் பெரியார். பெரியாரின் பொன்மொழிகள் சிலவற்றை இப

காதல் திருமணங்கள் வளரட்டும்!

காதல் திருமணங்கள் வளரட்டும்! - தந்தை பெரியார் இங்குக் கழகம் சார்பில் கூட்டம் நடப்பதற்குமுன் வேறு ஒரு புதிய பணியைச் செய்யக் கருதுகி றேன். இங்கு நடைபெறும் இத்திருமணமானது காதல் திருமணம் என்று சொல்ல ப்படக் கூடியது ஆகும். இதை முதலில் நடத்தி விட் டுப் பிறகு கூட் டத்தை நடத்தலாம் என்றார்கள். நானும் சரி என்று ஏற்றுக்கொண்டேன். இந்தத் தம்பதிகள் இன்று வாழ்க்கைத் துணை வர்களாக ஏற்றுக் கொள்ளும் திரு மண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத் திரு மணம் பற்றி ஒரு சிறு விளக்கம் சொன் னால், தெளிவாக இருக்கும் என்று கருதுகி றேன். இம்மணமக்கள் இருவரும் ஒருவ ருக்கொருவர் நேரிலேயே சந்தித்து, தங்க ளுக்குக் காதல் ஏற்படுத்திக் கொண்டார் கள். இது, இவர்கள் இரண்டு பேர்களின் (more…)

“இதுதான் உங்களின் ஆண் திமிர்!” —- தந்தை பெரியார்

“இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும், முறைக ளும் சரிவர நடைபெறா. அப்படி எங்காவது நடைபெற்றாலும் நிலைத்திருக்க முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படியே இருக்கு மானால் 4 அல்லது 5 பெண்கள் கூடி ஒரு ஆணை தங்கள் இன்பத்தி ற்கென்று ஏற்படுத்தி, அவனுக்கு (more…)

காதல் – பெரியார் அவர்களது பார்வையில் . . .

"இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள், 'அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு; காதல் வேறு' என்றும், 'அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்க ளுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்துக்காக ஏற்படுவதாகும்' என்றும், 'அதுவும் இரு வருக்கும் இயற்கையாக உண்டாகக் கூடிய தாகும்' என்றும், 'அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை' என்றும், 'அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்தி ரந்தான் இருக்க முடியும்' என்றும், அந்த ப்படி 'ஒருவரிடம் ஒருவருக்குமாக இரு வருக் கும் ஒரு காலத்தில் காதல் ஏற் பட்டுவிட்டால், பிறகு எந்தக் காரணங்கொண்டும் எந்தக் காலத்தி லும் அந்தக் காதல் மாறவே மாறாது' என்றும், 'பிறகு வேறொருவரி டம் காதல் ஏற்பட்டுவிட்டால், அது காதலா யிருக்க முடியாது; அதை விபசார மென்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, அது ஒருக்காலும் காதலாகாது' என்றும், 'ஒர

பழைய திருமண முறையின் அடிப்படை என்ன? – தந்தை பெரியார்

தாய்மார்களே! பெரியோர்களே! முதலாவது உங்களுக்குச் சொல் கிறேன். மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் எல்லாம் செய்தாலும்கூட இந்த வாழ்த் துக் கூறுதல் என்ற மூட நம்பிக்கையைப் போக்க முடியவில்லை. மற்ற சடங்குக ளை எல்லாம் நிறுத்தி விட்டேன். இதை நிறுத்த முடியவில்லை. கொஞ்சம் நாளா கும். மக்களுக்கெல்லாம் நல்ல அறிவு வரவேண்டும். அப்போது இதுவும்தானாக மாறிவிடும். என்னைப் பொறுத்த வரையில் இந்த வாழ்த்துக்கூறுவது என்பதில் எனக்குக் கொஞ்சமும் நம்பி க்கை இல்லை. வாழ்த்துக் கூறுவதை நம்பினால் வசையையும் நம்ப த்தானே வேண்டும். அதற்கு என்ன பலனோ, அதே பலன் தானே இதற்கும் உண்டு! சாதாரணமாக நடைபெறுவது போலல்லாமல் இது கொஞ்சம் மாறு தலாக நடைபெறுகிறது. நல்ல அறிஞர்கள், பெரியவர்கள் எல்லாம் இம்முறையைக் (more…)

திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம் – தந்தை பெரியார்

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட் பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை (1.6.50)யில் பெரியார்  முட்டாள்தனம்  இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது (more…)

பெரியார் பெருமைகள்

பெரியாரின் கேள்வி நேரம் அப்போவெல்லாம் ஐயா பேசற கூட்டங்கள்லே,கேள்வி-பதில் நிக ழ்ச்சி கண்டிப்பா இருக்கும். எந்த கக்ஷ்ட மான கேள்விக்கும் அப்பவே ஐயா அரு மையான பதில் சொல்வாரு. அந்த கேள்விக்கு பதில்களை யாரவது தொகுத்திருந்தா இன்னைக் கு அதை ஒரு அருமையான புத்தகமா வெளியிடலாம் அவ்வளவு சுவையாக இருக்கும். அன்னைக்கு காரைக்குடி கூட்டத்திலேயு ம் அது மாதிரி கேள்வித் தாளைத்தான் ஐயாகிட்டே கொடுக்கிறாங்கனு நெனச்சு க்கிட்டு நாங்க எல்லாம் பேசாம இருந்து ட்டோம்.வழக்கமா ஐயா முதல்லே மைக் லே அக்கேள்வியை படிச்சுட்டு அப்புறம் தன்னோட பதிலை சொல்வார். ஆனா அன்னைக்கு அந்த தாளை படி ச்சுட்டு ஒன்னும் சொல்லாம பக்கதிலே இருந்த அண்ணாக்கிட்டே அதைக் கொடுத்திட்டார். அண்ணா படிச்சு பார்த்ததும் லேசா (more…)

தந்தை பெரியார் அவர்களின் அயல்நாடு சுற்றுப்பயணம் (1929-1932)

பெரியார் ரஷ்யசுற்றுபயணத்தின்பொழுது 1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். தைப்பிங், மலக்கா, கோலாலம்பூர், கங்கைப்பட்டாணி போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு டிசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எஸ்.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். எகிப்து, கிரிஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், 1932 நவம்பர

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்

முதன்மைக் கட்டுரை: சுயமரியாதை இயக்கம் சுயமரியாதை இயக்கத்தின துவக்க காலத்தின் பொழுது பெரியார் பெரியார் மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்க கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்ர் இந்தியாவின் விடுதலைக்காக போராடிவந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் பிரமணரல்லாதோர் தாம் பழம்பெரும் திராவிடர்கள் என்றப் பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது. சுயமரியாரியாதை இயக்கம் 1925 இல் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கை பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திக்குரிய மூடபழவழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதை தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையினிருந்து மீட்டெடுக்கவும், த
This is default text for notification bar
This is default text for notification bar