ஃப்ரெஷ்ஷாக காய்கறி, பழங்களைப் பார்த்தால்போதும்.. தேவை யோ, இல்லையோ ஏகப்பட்டதை வாங்கி வந்து, ஃப்ரிட்ஜ் வழிகிற அளவுக்குத் திணித்து வைப்பது பலரது பழக்கம். கடைசியில், அவற்றில் பலதும் உபயோகிக்க ப்படாமல், ஃப்ரிட்ஜுக்குள் ளேயே சுருங்கி, அழுகிப் போயிரு க்கும். காசு கொடுத்து வாங்கிவிட்ட காரணத் துக்காகவே, அழுகின, சுருங்கின பகுதி களை வெட்டி எறிந்துவிட்டு, மிச்ச மீதி யை உப யோகிப்பதும் நம்மில் பலருக்கு வாடிக்கை. அது ரொம்பவே ஆபத்து. காய்கறி, பழங்களும் கூட காலாவதி ஆகும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
'இ ஃபார்ம்’ வெங்கட் - வள்ளி சொல்வ தைக் கேளுங்கள். ‘‘இன் னிக்கு பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட், காய்கறிக் கடைகள்ல காய்கறிகள், பழங்கள் வாங் கறது ஒரு ஃபேஷனா இருக்கு. ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சீசன் உண்டு. அந்தந்த சீசன்ல அந்தப் பழங்களை வாங்கி சாப்பிட்ட காலம் போய், இன்னிக்கு எல்லா (more…)