அயோத்தி தீர்ப்பால் நாடு முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கை, உஷார் நிலையில் போலீசார் . . .
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி, நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் இறுதித் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் இன்று வழங்குகிறது. இந்த தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக நாடே, லக்னோவை நோக்கி திரும்பியுள்ளது. நீதிபதி எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகின்றனர். இந்த தீர்ப்பு வருவதையொட்டி லக்னோ, அயோத்தி நகரங்களை மையமாக வைத்து, உ.பி., முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்க லக்னோ, அயோத்தி