
இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
இப்படியும் ஒரு ஏமாளி - ஓர் உண்மைச் சம்பவம்
ஒரு நாள் மதிய உணவு முடித்து எனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வந்தார். அவர் என்னிடம் வந்து, "சார், நான், எனது சொந்த ஊரில் 6 ஆண்டுகளுக்குமேலாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறேன். அந்த நிறுவனத்தின் கிளை ஒன்று சென்னையில் திறக்க விரும்பி, இணையதளம் மூலமாக வாடகைக்கு அலுவலகம் தேடிய போது அப்போது ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு அலுவலகம் வாடகைக்கு இருப்பதாக ஒரு விளம்பரம் வந்தது. உடனே நான் அந்த விளம்பரத்தில் உள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொண்ட போது, ஒரு பெண்தான் பேசினார். அவர் என்னிடம் ரூ.1,50,000- (ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) முன்தொகை (அட்வான்ஸ்) என்றும் மாத வாடகை ரூ.15,000- (ரூபாய் பதினைந்தாயிரம்) என்று சொன்னார். அவர் சொன்னதை நம்பி, நானும் எனது நண்பரும் சென்னைக்கு வந்து அவரை நேரில் சந்தித்து, அவ